வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
82205-44911
பஞ்ச பூதங்களை நமது வீட்டில் எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும்.
அதனால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மை தீமைகளைப் பற்றி அறிவோம்.
வட கிழக்கு :
நாம் குடியிருக்கும் மொத்த வீட்டில் வடகிழக்கு பகுதியை ஈசான்யம் என்போம். இதில் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீருக்கு சம்பந்தப்பட்ட பகுதியாகும். அதனால்தான் இப்பகுதியில் தண்ணீர்தொட்டி அமைப்பு போர், சம்ப், கிணறு போன்ற தரைக்குக்கீழ் தண்ணீரை சேமிக்கக்கூடிய அமைப்புகளை உருவாக்குகிறோம்.
தென் கிழக்கு :
நாம் குடியிருக்கும் மொத்த வீடு அமைப்பில் தென்கிழக்கு என்பது அக்னி மூலை என்போம். இந்த பகுதியில் பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு உரிய பகுதியாகும். இந்த பகுதியில் சமையலறை மட்டுமே அமைக்க காரணம் இதுவே. இந்த பகுதியில் சமையலறை வரும்போது பல நன்மைகள் வந்து சேரும்.
தென்மேற்கு பகுதி :
நாம் குடியிருக்கும் மொத்த வீட்டிற்கும் தென்மேற்கு பகுதியான கன்னி மூலை அல்லது குபேர மூலை அல்லது நைருதி என்று சொல்லக்கூடிய பகுதி மண்ணிற்கு உரிய பகுதியாகும். அதனால்தான் இந்த பகுதியில் மாஸ்டர் பெட்ரூம் அமைக்கிறோம். அதே போல் மிக கணமான பொருட்களை வைக்கக்கூடிய அமைப்புகளை இங்குதான் உருவாக்குகிறோம்.
வடமேற்கு :
மொத்த இடத்திற்கு வடமேற்கு என்கிற மூலையை வாயு மூலை என்று கூறுவோம். இந்த மூலை பஞ்ச பூதங்களில் காற்றுக்கு உண்டான இடம் என்போம். அதனால் இந்த பகுதியில் கழிவு நீர் தொட்டி போன்ற அமைப்புகளை உருவாக்குகிறோம்.
ஆகாயம் என்பது வெறும் வெட்ட வெளியாக அமைகிறது. நாம் குடியிருக்கும் வீட்டில் உள்ள உள் பகுதியில் உள்ள வெற்றிடமே ஆகாயம் என்போம். கூரையை பொருத்த வரையில் ஒரே சமதளமாக அமைய வேண்டும். அப்போதுதான் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வீட்டின் நடுப்பகுதியில் திறந்த அமைப்பு வரும் பட்சத்தில் கெடுதலான பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
தீமைகள் :
நீருக்கு உண்டான பகுதியில் வரக்கூடாதவைகள் :
1. நெருப்பு சமப்ந்தப்பட்ட எதுவும் வைக்க கூடாது.
2. கணமான பொருட்கள் வைக்க கூடாது.
3. கழிவுநீர் தொட்டி போன்றவைகள் வைக்க கூடாது.
நெருப்பு உண்டான பகுதியில் வரகூடாதவைகள் :
1. தண்ணீர்
2. கணமான பொருட்கள்
3. கழிவுநீர் தொட்டிகள்
மண்ணிற்கு உண்டான பகுதியில் வரக்கூடாதவைகள் :
1. நெருப்பு
2. கழிவுநீர் தொட்டி
3. தண்ணீர் தேக்கி வைக்கக்கூடிய அமைப்புகள்
காற்றுக்குண்டான பகுதியில் வரக்கூடாதவைகள் :
1. கணமான பொருட்கள்
2. தண்ணீர் தேக்கி வைக்க கூடிய அமைப்புகள்
இதுபோல் மிக நுட்பமான அமைப்புகளை அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரால் மட்டுமே கற்று உணர்ந்து கூறமுடியும்.