பஞ்சாங்கத்தின் நான்காம் அங்கமான யோகம்
பஞ்சாங்கத்தின் நான்காம் அங்கமான இந்த யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம். அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியன் இருக்கும் தூரத்தையும், சந்திரன் இருக்கும் தூரத்தையும் கூட்டினால் வருவது இந்த யோகமாகும். இந்த யோகங்கள் மொத்தம் இருபத்தேழாகும். இந்த யோகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயர் (நாமம்) இருப்பதால் இதனை நாமயோகம் என்பார்கள். இந்த 27 நாமயோகங்களின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. விஷ்கம்பம்
2.ப்ரீதி
3.ஆயுஷ்மான்
4.செளபாக்யம்
5.சோபனம்
6. அதிகண்டம்
7.சுகர்மம்
8.திருதி
9.சூலம்
10.கண்டம்
11.விருத்தி
12.துருவம்
13.வியாகாதம்
14. ஹர்ஷனம்
15. வஜ்ரம்
16. சித்தி
17.வியதீபாதம்
18. வரீயான்
19. பரீகம்
20. சிவம்
21.சித்தம் 22. சாத்தியம்
23. சுபம்
24. சுப்பிரமம்
25. பிராம்யம்
26. ஐந்திரம்
27.வைதிருதி