பங்குனி மாத ராசிபலன்கள்

பங்குனி மாத ராசிபலன்கள் !!

மேஷம் :

உயரிய எண்ணங்களை உடைய மேஷ ராசி அன்பர்களே !

இம்மாதம் உடன்பிறந்தவர்களால் சாதகமான சூழல் உண்டாகும். செய்யும் செயல்களால் பாராட்டப்படுவீர்கள். மனதில் இருந்த வீண் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும் மற்றும் தனலாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று கவனத்துடன் செயல்படவும். தொழிலில் உள்ள எதிரிகளின் இடையூறுகள் அகலும். புத்திரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களினால் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் அமையும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும்.

வழிபாடு :

சண்முகநாதனை செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மேன்மை உண்டாகும்.

ரிஷபம் :

உழைப்பால் சிகரத்தையும் தொட முடியும் என்ற நம்பிக்கையை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே !

நீங்கள் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். செயல்பாடுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தினால் மனக்கஷ்டங்கள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதற்கு காலதாமதம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். ஆடிட்டிங் தொழிலில் உள்ளவர்கள் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எவ்விதமான பணியையும் நீங்களே செய்வது அவப்பெயர்களை தடுக்கும். வீட்டிலுள்ள பெரியோர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். நீர் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். சம வயதினரால் சாதகமான பலன்கள் உண்டாகும். கால்நடைகளை வளர்ப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கடன்காரர்களால் ஏற்பட்ட மனக்கவலைகள் நீங்கும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமிதேவியை வழிபட்டு வர சகல நன்மைகளும் கிடைக்கும்.

மிதுனம் :

ஒரே நேரத்தில் பலவிதமான செயல்களை செய்யக்கூடிய மிதுன ராசி அன்பர்களே !

மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் சரியான முடிவை எடுப்பதில் காலதாமதம் உண்டாகும். தொழில் சம்பந்தமான சிந்தனைகள் மேலோங்கும். பணி செய்யும் இடங்களில் மாற்றங்கள் உண்டாகலாம். உறவினர்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். கல்வி பயிலும் மாணவர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இன்பச் சுற்றுலாக்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு நற்பெயர்கள் உண்டாகும். மனைவியின்  உறவுகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தொழிலில் போட்டிகளை சமாளித்துவெற்றியடைவதற்கான சூழல் அமையும்.

வழிபாடு :

பெருமாளை புதன்கிழமை தோறும் வழிபட்டு வந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும்.

கடகம் :

சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும் சாதுர்யமான கடக ராசி அன்பர்களே !

நண்பர்களின் ஆதரவால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களிடமிருந்து சுப செய்திகள் வரும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையானப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூமி விருத்தி செய்வதற்கான பணியில் ஏற்பட்ட தடைகளை கடந்து சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாயின் உடல்நலனில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். பிள்ளைகளின் ஆசைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வழக்குகளால் தேவையற்ற விரயச் செலவுகள் உண்டாகும். தந்தை வழி உறவினர்களிடம் கவனம் தேவை. தொழிலில் புதுவிதமான மாற்றங்களை செய்ய முயல்வீர்கள்.

வழிபாடு :

நந்திதேவருடன் உள்ள சிவபெருமானை வழிபட்டு வர அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

சிம்மம் :

எதற்கும் அஞ்சாமல் தைரியத்துடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே !

செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் வீண் செலவுகள் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். செய்தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் செல்வாக்கு உயரும். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்திகள் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டு வீரர்களுக்கு போட்டியில் சாதகமான சூழல் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் ஈடுபடுவீர்கள்.

வழிபாடு :

ஆஞ்சநேயரை சூரிய ஓரையில் வழிபட்டு வர மேன்மையான சூழல் உண்டாகும்.

கன்னி :

இன்முகத்துடன் அனைவரிடமும் கருணை காட்டும் கன்னி ராசி அன்பர்களே!

தொழில் சம்பந்தமான விஷயங்களில் சரியான முடிவு எடுக்க முடியாமல் குழப்பமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். மாதத்தின் முற்பகுதியில் தொழிலில் சில பிரச்சனைகள் தோன்றினாலும் பிற்பகுதியில் சாதகமான சூழல் அமையும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். நிர்வாகத் துறையில் நீங்கள் செய்யும் மாற்றங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். செய்யும் முயற்சிகளால் மேன்மையான சூழ்நிலை அமையும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை.

வழிபாடு :

இராமரை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வந்தால் நன்மைகள் உண்டாகும்.

துலாம் :

மற்றவர்களை எடை போடும் சாமர்த்தியசாலியான துலாம் ராசி அன்பர்களே !

எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதியவர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் அதிகரிக்கும். தந்தையிடம் உரையாடும்போது கவனம் வேண்டும். ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டவர்களுக்கு எண்ணிய முடிவு கிடைக்க காலதாமதம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உண்டாகும். வீண் அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். கடல் மார்க்க பயணங்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். பொழுதுப்போக்கு விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் தேவையற்ற பய உணர்வு ஏற்படும். அண்டை வீட்டாருடன் உறவு மேம்படும். கூட்டாளிகளின் ஆதரவால் சேமிப்பு உயரும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருள்களினால் செலவுகள் அதிகரிக்கும். பெரியோர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும்.

வழிபாடு :

நடராஜரை வழிபட்டு வந்தால் வாழ்க்கையில் வளம் உண்டாகும்.

விருச்சகம் :

எதிலும் மனம் தளராமல் போராடும் குணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே !

செய்யும் முயற்சிகளில் தனலாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சில தடைகளை கடந்து எண்ணிய இலக்கை அடைவீர்கள். உறவினர்கள் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். வாகன பயணங்களில் அனுகூலமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் இருந்த சிக்கல்கள் நீங்கி சுமூகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அனுகூலமான நன்மை உண்டாகும். பிரபலமானவர்களின் நட்புகள் கிடைக்கும். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வம்பு வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும். தெளிவற்ற எண்ணங்களால் அமைதியற்ற மனநிலை ஏற்படும். அரசு காரியங்களில் கவனம் வேண்டும். மூத்த உடன்பிறப்புகளால் சாதகமற்ற நிலை உண்டாகும்.

வழிபாடு :

எல்லைச்சாமியான முனீஸ்வரர் வழிபாடு நன்மையை தரும்.

தனுசு :

எதிலும் நிதானமும், வேகமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே !

நிதானமான செயல்பாடுகளால் லாபம் உண்டாகும். மனை சம்பந்தபட்ட விவகாரங்களில் பொருள் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவால் வருமான வாய்ப்புகள் உண்டாகும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சம வயது உடையவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் உதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளால் மேன்மையான சூழல் உண்டாகும். கலைஞர்களுக்கு மாதத்தின் முன்பகுதியில் சாதகமான நற்பலன்கள் கிடைக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

வழிபாடு :

அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு மேன்மையை தரும்.

 

மகரம் :

துடிப்பும், விவேகமும் உடைய மகர ராசி அன்பர்களே !

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த தன வரவுகள் கிடைக்க காலதாமதமாகும். தொழிலில் செய்யும் புதுவித மாற்றங்களால் மேன்மை உண்டாகும். மனைகளால் விரயச் செலவுகள் உண்டாகும். வாகனத்தில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளுடன் மனக்கசப்புகள் உண்டாகும். புத்திரர்களின் உடல்நலனில் கவனம் வேண்டும். பெரியோர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பூர்வீக சொத்துகளில் இருந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிட்டும். சுய தொழில் செய்வதற்கான எண்ணங்சள் மேலேங்கும். சந்தேக உணர்வினால் தெருங்கிய உறவினர்களுக்கிடையே மனக்கசப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும். தொழிலில் செய்யும் மாற்றங்களில் சற்று நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல்கள் ஏற்படும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

வழிபாடு :

அம்பிகை வழிபாடு மன அமைதியை உண்டாக்கும்.

கும்பம் :

அமைதியான குணம் உடைய கும்ப ராசி அன்பர்களே !

எடுத்த செயல்களில் எண்ணிய விதமே வெற்றி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்படும் கலகலப்பான சூழலால் மனம் மகிழ்வீர்கள். மனதில் இனம்புரியாத புது வகை எண்ணங்கள் தோன்றும். பொதுத் தொண்டில் ஈடுபடுவோருக்கு கீர்த்திகள் கிட்டும். செய்யும் தொழிலில் புதிய நபர்களின் அறிமுகத்தால் எண்ணிய லாபம் உண்டாகும். தலைமை பதவியில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து சுமூகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத கௌரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். மகான்களின் தரிசனம் கிட்டும். தந்தையின் சொத்தில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் பேசுபவர்கள் சற்று நிதானத்துடன் உரையாடவும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். வீண் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.

வழிபாடு :

விநாயகர் வழிபாடு விக்னங்களை தீர்க்கும்.

மீனம் :

எவ்வித இடர்பாடுகள் வந்தாலும் எதிலும் மாட்டிக் கொள்ளாத மீன ராசி அன்பர்களே !

புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் புதிய மாற்றங்களை செய்ய முயல்வீர்கள். உடன்பிறப்புகளால் தொழிலில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் நீங்கி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணங்களினால் எதிர்பார்த்த பலன் கிடைக்க காலதாமதமாகும். மனை விவகாரங்களில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்களுக்கிடையே அமைதியாக செயல்படுவீர்கள். எண்ணிய எண்ணங்களை செயல்படுத்தும் வேகம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் வேகத்தை குறைப்பீர்கள். புத்திரர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கலைகளில் நாட்டம் அதிகரிக்கும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து செய்வீர்கள்.

வழிபாடு :

சதாசிவனை ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட வாழ்வில் மாற்றம் உண்டாகும்.