நோய் கூறுகள்

மேஷம் :
தலைவலி , நரம்பு மண்டல சம்பந்தமான நோய், ஆழ்நிலை மயக்கம்,நினைவிழந்த நிலை மூளை நோய் , மூளையில் இரத்தப்போக்கு , தூக்கமின்மை , வீக்கமுண்டாக்கும் நோய்கள், தலை முகம் பாதிக்கும் வலி ,முகபரு ,மொக்கில் வளரும் நீர்ச்சதை , ஒரு பக்கத்தலைவலி , தலைசுற்றல் ,கிறுகிறுப்பு,மூளைக்காய்ச்சல் வட்டமான இளவழுக்கை .
 
ரிஷபம் :
வறண்ட தொண்டை,கழுத்துச் சுரப்பிகளின் வீக்கம் ,டான்சில் வீக்கத்தால் சீழ் கட்டிப்போதல் , மூச்சுக் குழாய் ,அடைப்பு , பொன்னுக்கு வீங்கி ,தைராய்டு சுரப்பிகள் குறைபாடு ,தொண்டை அடைப்பான் நோய், புலன்களின் தசைகளைத் தாக்கும் நோய், தலையில் உண்டாகும் தசை முண்டு ,காற்றுக்குழாயில் சீழ் பிடித்தல் , கண்டமாலை , நெஞ்சுவலி.
 
மிதுனம் :
ஆஸ்துமா ,சளியினால் காய்ச்சல் சுவாசக்குழாய் நோய், இருதய உறை,நுரையீரல் மேலுறையில் உப்புச்சத்துகள் மிகுந்து நீர் தங்கிப் போவதி ,   நுரையீரல் நோய்கள் ,சளித் தொந்தரவு ,வறண்ட இருமல் , இருதயத்தைச் சூழ்ந்துள்ள தோலுறை வீக்கம்,காசநோய் , கைகளில் பாதிப்பு ,சுவாச முறையில் பலவித கோளாறுகள் ,இரத்தம் கெட்டுப் போகுதல் .
 
கடகம் :
வயிற்றுப் புற்றுநோய் மற்றும் வயிற்றுவலி, வாய்வுக்கோளறு, நீர்க்கோர்த்துக் கொள்ளல்,அஜீரணம், இருமல் ,தீவிர இருமல், மனோவியாதி, மஞ்சள் காமாலை , இரத்த சோகைக்கு முன் ஏற்படும் மஞ்சள் கலந்த பச்சை நிற தோற்றம் , பித்தப்பை கல் , நீரிழிவு நோய் .
 
சிம்மம் 
இருதய நோய் இருதய படபடப்பு , மூட்டு நோயினால் காய்ச்சல் , தண்டுவடம் பாதிக்கும் கொடிய நோய், வெய்யில் தாக்கம் – தளர்ச்சி, இரத்த ஓட்டத்தில் இரத்த வால்வுகளின் குறையினால் சீரற்ற தன்மை, தள்ளாட்டம், உயிர் இரத்த அழுத்தம் , தீவிர ஆனால் தற்காலிக நெஞ்சுவலி , தமனி வீக்கம் ,நெஞ்சடைப்பால் ஏற்படும் தீடீர் மயக்கம்,அடிக்கடி மயக்கம் ஏற்படல், கூன்முதுகு ,பிளேக் போன்ற கொள்ளை நோய்,இரத்த சோகை இரத்தக் குழாய்களின் சுவர் தட்டித்துபோதல் .
 
கன்னி 
இடுப்பு சம்பந்தமான இடை ஊறுகள் ,சில்லிட்ட உடல்நிலை, வயிற்றில் நாடாபூச்சி, பண்டபூச்சி,கொக்கி பூச்சி, வயிற்றுப் போக்கு காலராநோய் , அடிவயிற்று வீக்கம் , மலச்சிக்கல், கெடுதியான உணவுப்பழக்கம், வைட்டமின் B குறைவு, உணவு செரிமான அமிலத்தை எற்காமை, குடல் சம்பந்தமான அனைத்து கோளாறுகள் . .
 
துலாம் 
நாசிக்குழாயில் கட்டி, சிறுநீரக நரம்புகளில் சீர்கேடு,சிறுநீரக குடல்வால் அழற்சி, சிறுநீர் வெளியேறாமல் அடைப்பு, குடல் இறக்கம், சிறுநீரக வீக்கம்,மூத்திரக்காய் வீக்கம்,கர்ப்பப்பை வீக்கம்-வலி, வலுவற்ற கீழ்முதுகு, இடுப்பில் வாயு பிடிப்பு, வலி, இடுப்புப்பட்டை கோளாறு, மூட்டுவலி, சொறி,சிரங்கு, தோல்வியாதி, கட்டளை நரம்பு மண்டல பாதிப்பு.
 
விருச்சிகம் 
பித்தப்பை பாதிப்பு, பெருங்குடல் அழற்சி, கர்ப்பப்பை உபாதை,உற்பத்திஉறுப்பு உபாதை, மலக்குடல் உபாதை, கர்ப்பப்பை சினைப்பை உபாதைகள் ,மாதவிலக்கு ஒருங்கின்மை அதனால் ஏற்படும் உபாதை, வெள்ளைபடுதல், மலவாயில் வெடிப்புகள், சிறுநீரகத்தில் கல்,பவுத்திரம், மூலநோய், பால்வினை நோய், விதைப்பையில் காயம்…
 
தனுசு 
இடுப்பு-தொடைகளுக்கு பாதிப்பு, சுயமாய் நடமாடுவதில் அசைவில் தடுமாற்றம், தொடை எலும்பில் உபாதை, சிறுகுடல் கோடல் காய்ச்சல், கணுமூட்டு வீக்கத்தால் தீவிர வலி, இடுப்பு எலும்பு இடம் பெயர்ந்து போதல், காய்ச்சலால் உபாதை, இரத்த ஒழுங்கின்மை, நுரையீரல், தெரிந்தே நரம்புகளுக்கு ஏற்படுத்திக் கொள்ளும் நோய்கள், சீழ்வடியும் கொப்புளங்கள், சீழ்க்கட்டிகள், கீழே விழுவதால் காயம் வெட்டுகள் ஏற்படுதல், தோள்பட்டை எலும்புகளுக்கு, சுவாச உபாதை, சிரை இரத்த நாள வீக்கம்.
 
மகரம்
முழங்கால் சில்லு, எலும்பு, முழங்கால் பின்புற பள்ளம் ஆகியவை பாதிப்பு ஏற்படல்,தொழுநோய்,ஜீரண உறுப்பு கோளாறு, மூட்டுநோய், மூட்டுவலி,நரம்பு சம்பந்தமான நோய்,மனநிலைநரம்பு  தளர்ச்சியால் விரக்தி மனப்பான்மை, கவலை,இரத்த பாதிப்பு,சொறி,சிரங்கு,தோல் தடிப்பு,ஒவ்வாமையால் ஏற்படும் அரிப்பு,தோல் கருத்துபோல் போன்ற அனைத்து தோல் நோய்.
 
கும்பம் 
இருதய உபாதை, மாரடைப்பு, மூட்டுவலி, தோல் நோய், இரத்த அழுத்தம், இருதய சீர்நிலை பாதிப்பு, கால்வீக்கம், பல்வேறு நரம்பு வியாதிகள், கணுக்கால் பிசகுதல், கணுக்கால் வீக்கம், சுளுக்கு, இரத்த சோகை, கீழே விழுதல், இழுத்துக் பிடித்தாற் போன்ற உணர்வு,இரத்தம் விஷமாகுதல், தும்மல்.
 
மீனம் 
பாதநோய்கள் மற்றும் பாத ஒழுங்கின்மை, பாத வீக்கம், மூட்டுக்களில் வீக்கம்,மூட்டுகளில் வீக்கம், ஈரமான பாதத்தால் சளியினால் காய்ச்சல்.