நாம் வாங்கக்கூடிய இடத்தை எப்படி தேர்ந்தெடுப்பது? Living Technology !
Living Technology – அடிப்படை விதி : 2
அறிவியல் வளர்ச்சியில் இன்றைக்கு அனைத்து துறைகளிலும் பல பல புதிய கண்டுபிடிப்புகளையும், பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறோம். அந்த வகையில் வசிப்பிட கலையிலும் பல பல புதிய தொழில் நுட்பங்களை நாம் அனுபவித்து வருகிறோம்.
ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியமாகவும், வசதியாகயும் வாழ எப்படிப்பட்ட தொழில் நுட்பத்தை கையாண்டால் வெற்றி பெற முடியும் என்பதே நமது Living Technology. இதற்கென்று பல விதிமுறைகள் உண்டு. அதனுடைய தொடர்ச்சியாக விதி 2 பற்றி பார்ப்போம்.
விதி : 2
நாம் வாங்கக்கூடிய இடத்தை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்?
1. காலிமனையோ, விவசாய நிலமோ எதுவானாலும் வடக்கு மற்றும் கிழக்கு தாழ்வான அமைப்பில் இருக்க வேண்டும்.
2. தெற்கு மற்றும் மேற்கு உயரமான அமைப்பாக இருக்க வேண்டும்.
3. வடகிழக்கு, வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் நாம் வாங்கக்கூடிய இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு உயரமான மலை குன்று, உயரமான மின் கோபுரம், கோவில் கோபுரம், செல்போன் கோபுரம் போன்ற அமைப்புகள் வரக்கூடாது.
4. நாம் வாங்கக்கூடிய இடத்தில் நான்கு புறமும் கண்ணில் படும்படியான தூரத்தில் மயானம் வரக்கூடாது.
5. கிணறு, ஆறு, ஓடை, குளம், குட்டை போன்றவைகள் அனைத்தும் நமது இடத்திற்கு வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும்.
6. நாம் கட்டக்கூடிய வீட்டமைப்பில் வடகிழக்கு தாழ்வாகவும், தென்மேற்கு உயரமாகவும் இருப்பது சிறப்பு. இதில் தரை மற்றும் முதல் தளம் இரண்டுக்கும் ஒரே விதி முறைதான்.
7. மழைநீர் முதல் கழிவு நீர் வரை வடகிழக்கு வழியாக வெளியேறும்படி வரவேண்டும்.
நான் மேற்கூறிய இந்த அமைப்புகள் ஒருவருடைய இடத்திலோ அல்லது வீட்டிலோ வருமானால் அந்த இடத்தில் வசிப்பவர்களுக்கு எப்போதுமே குறைவான பலனையே அனுபவிக்க நேரிடும்.
Living Technology படி ஒருவர் வீடு கட்டும்போது அவர்களுக்கு மேலும் மேலும் நல்ல விஷயங்களும், நல்ல வாழ்க்கையும் கிடைக்கும். மேலும், சந்தோஷமாகவும் வாழ்வார்கள்.