நவகிரகங்களின் சிறப்புகள்

நவகிரகங்களின் சிறப்புகள்

 

சூரியன்

காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.

ராசி அதிபதி – சிம்மம்   

    திக்கு – கிழக்கு

    அதிதேவதை – அக்னி

    ப்ரத்யதி தேவதை – ருத்திரன்

    தலம் – சூரியனார் கோவில் 

    நிறம் – சிவப்பு

    வாகனம் – ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்

    தானியம் – கோதுமை

    மலர் – செந்தாமரை , எருக்கு

    வஸ்திரம் – சிவப்பு

    ரத்தினம் – மாணிக்கம்

    அன்னம் – கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

 

சந்திரன்

பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.

ராசி அதிபதி – கடகம்

    திக்கு -தென்கிழக்கு

    அதிதேவதை – ஜலம்

    ப்ரத்யதி தேவதை – கௌரி 

    தலம் – திருப்பதி

    நிறம் – வெள்ளை

    வாகனம் – வெள்ளைக் குதிரை

    தானியம் – நெல்

    மலர் – வெள்ளை அரளி

    வஸ்திரம் – வெள்ளாடை

    ரத்தினம் – முத்து

    அன்னம் – தயிர் சாதம்

 

அங்காரகன் (செவ்வாய்)

இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.

ராசி அதிபதி – மேஷம் , விருச்சிகம்

    திக்கு -தெற்கு

    அதிதேவதை – நிலமகள்

    ப்ரத்யதி தேவதை – க்ஷேத்திரபாலகர்

    தலம் – வைத்தீசுவரன் கோவில்

    நிறம் – சிவப்பு 

    வாகனம் – ஆட்டுக்கிடா

    தானியம் – துவரை 

    மலர் – செண்பகப்பூ, சிவப்பு அரளி

    வஸ்திரம் – சிவப்பு ஆடை 

    ரத்தினம் – பவளம்

    அன்னம் – துவரம் பருப்பு பொடி சாதம்

 

புதன்

இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

ராசி அதிபதி – மிதுனம், கன்னி

    திக்கு – வட கிழக்கு

    அதிதேவதை – விஷ்ணு

    ப்ரத்யதி தேவதை – நாராயணன் 

    தலம் – மதுரை 

    நிறம் – வெளிர் பச்சை

    வாகனம் – குதிரை

    தானியம் – பச்சைப் பயறு  

    மலர் – வெண்காந்தள்

    வஸ்திரம் – வெண்ணிற ஆடை 

    ரத்தினம் – மரகதம் 

    அன்னம் – பாசிப்பருப்பு பொடி சாதம்

 

குரு

இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.

ராசி அதிபதி – தனுசு , மீனம்

    திக்கு – வடக்கு

    அதிதேவதை – பிரம்மா

    ப்ரத்யதி தேவதை – இந்திரன் 

    தலம் – திருச்செந்தூர்  

    நிறம் – மஞ்சள் 

    வாகனம் – மீனம் 

    தானியம் – கடலை    

    வஸ்திரம் – மஞ்சள் நிற ஆடை

    ரத்தினம் – புஷ்பராகம் 

    அன்னம் – கடலைப்  பொடி சாதம் , சுண்டல்.

 

சுக்கிரன்

இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர்.

ராசி அதிபதி – ரிஷபம், துலாம்

    திக்கு – கிழக்கு

    அதிதேவதை – இந்திராணி 

    ப்ரத்யதி தேவதை – இந்திர மருத்துவன் 

    தலம் – ஸ்ரீரங்கம் 

    வாகனம் – முதலை

    தானியம் – மொச்சை

    மலர் – வெண் தாமரை

    வஸ்திரம் – வெள்ளாடை

    ரத்தினம் – வைரம்

    அன்னம் – மொச்சைப் பொடி சாதம் .

 

சனி

இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.

ராசி அதிபதி – மகரம் , கும்பம்.

    திக்கு – மேற்கு 

    அதிதேவதை – யமன்

    ப்ரத்யதி தேவதை – பிரஜாபதி 

    தலம் – திருநள்ளாறு 

    நிறம் – கருமை

    வாகனம் – காகம்

    தானியம் – எள்

    மலர் – கருங்குவளை, வன்னி

    வஸ்திரம் – கருப்பு நிற ஆடை

    ரத்தினம் – நீலம் 

    அன்னம் – எள்ளுப்பொடி சாதம்

 

ராகு

இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.

    திக்கு – தென் மேற்கு 

    அதிதேவதை – பசு

    ப்ரத்யதி தேவதை – பாம்பு 

    தலம் – காளத்தி  

    நிறம் – கருமை

    வாகனம் – நீல சிம்மம் 

    தானியம் – உளுந்து

    மலர் – மந்தாரை

    வஸ்திரம் – கருப்பு நிற ஆடை

    ரத்தினம் – கோமேதகம்  

    அன்னம் – உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

 

கேது

இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.

    திக்கு – வட மேற்கு 

    அதிதேவதை – சித்திரகுப்தன் 

    ப்ரத்யதி தேவதை – பிரமன்

    தலம் – காளத்தி  

    நிறம் – செம்மை

    வாகனம் – கழுகு 

    தானியம் – கொள்ளு 

    மலர் – செவ்வல்லி 

    வஸ்திரம் – பல நிற ஆடை

    ரத்தினம் – வைடூரியம் 

    அன்னம் – கொள்ளுப்பொடி சாதம்