நம்முடைய இடத்திற்கு எந்த பகுதியில் உள்ள இடம் வாங்குவது சிறப்பை தரும்!

வாஸ்து நிபுணர் 
P.Mகிருஷ்ண ராஜன்
8220544911

 

நம்முடைய இடத்திற்கு எந்த பகுதியில் உள்ள இடம் வாங்குவது சிறப்பை தரும்!

நாம் குடியிருக்கும் இடத்திற்கு அருகில் விற்பனைக்கு வரக்கூடிய மனைகளை எந்த பகுதியில் இருந்தால் அதை வாங்கலாம். அதனால் நமக்கு ஏதேனும் நன்மை தீமை உண்டா என்பதை பற்றியும் இடம் வாங்கும்போது யாருடைய பெயரில் வாங்க வேண்டும் என்பதைப் பற்றியும் அறிவோம்.

 நாம் வசிக்கும் வீட்டிற்கு மிக அருகாமையில் அதாவது நமது இடத்திற்கு ஒட்டிய இடம் விற்பனைக்கு வரும்போது பொதுவாகவே எல்லோரும் நினைப்பது என்னவென்றால் நமக்கு மிக மிக அருகில் கிடைக்கிறது. அதை வாங்கி விட்டால் நமக்கு எதிர்காலத்தில் நமது பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு இடமாக கொடுத்து விடலாம். அல்லது நமக்கு கார்பார்க்கிங்கிற்காக அதை உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்று. ஆனால் அந்த இடம் எந்த பக்கம் இருந்தால் அதை நாம் வாங்குவது சிறப்பை தரும்.

தெற்கு பகுதி :

 நாம் குடியிருக்கும் இடத்திற்கு தெற்கு பகுதியில் ஒரு காலி இடம் விற்பனைக்கு வருகிறது என்றால் அதை வாங்குவது மிக மிக தவறு. அப்படியே நீங்கள் வாங்க வேண்டுமென்றால் ஒரு வாஸ்து நிபுணரின் ஆலோசனைக்குப் பிறகு வாங்குவது சிறப்பு.

மேற்கு பகுதி :

 நாம் குடியிருக்கும் இடத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள காலி இடத்தை வாங்கலாம் என்றால் கூடவே கூடாது. அதுவும் இலவசமாக கொடுத்தாலும் கூட வாங்க கூடாது. ஒருவேளை நீங்கள் வாங்க வேண்டுமென்றால் வாஸ்து நிபுணரின் உதவி இல்லாமல் வாங்குவதை தவிர்க்கவும். 

தீமைகள் :

 தென்மேற்கு பகுதியில் நாம் காலி இடத்தை வாங்கும்போது அந்த காலி இடத்திற்கு வடக்கோ கிழக்கோ நமது வீடு அந்த இடத்திற்கு பாரமாகி விடும். அதனால் முதலில் வருவது கடன்சுமை இரண்டாவது வருவது விபத்து வருமானம் தடைபடுதல் மூன்றாவது இதுபோல் தெற்கு மேற்கையும் வாங்கி வீடுகள் சிறிது நாளில் கடனுக்காக மொத்த இடத்தையும் விற்றுவிட்டு ஊரை காலி செய்து விட்டு போகக்கூடிய சூழ்நிலைகளை நான் பார்த்திருக்கிறேன்.

வடக்குஇ கிழக்கு பகுதி :

 நாம் குடியிருக்கும் வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் எவ்வளவு பெரிய மனைகள் கிடைத்தாலும் வாங்கி கொள்ளுங்கள் அதனால் முழுக்க முழுக்க நன்மையே. நீங்கள் வடக்கு கிழக்கு மனைகளை வாங்கும்போது நமது அடிப்படை விதிகளை கொஞ்சம் கவனத்தில் எடுத்து கொண்டு வாங்குவது சிறப்பு.

 நீங்கள் வாங்கக்கூடிய இடம் காலி மனையோ வீடோ அல்லது விவசாய நிலமோ எதுவானாலும் உங்க வீட்டின் எஜமானியின் பெயரில் வாங்குங்கள். அது மேலும் நல்ல பலன்களையே தரும். இது எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

 நீங்கள் வாங்கக்கூடிய இடத்தின் மதிப்பு பல லட்சம் முதல் கோடி வரை அதனால் இடம் வாங்கும் முன்பு வாஸ்து நிபுணரின் ஆலோசனையை கேட்டு வாங்குவது சாலச்சிறந்தது.