நக்ஷத்திரங்களுக்கு உரிய மரங்கள்

நக்ஷத்திரங்களுக்கு உரிய மரங்கள்

 

ஒவ்வொரு நக்ஷத்திற்கும் ஒரு மரங்கள் உண்டு. இவை ஜோதிடத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. அந்தந்தெந்த நக்ஷத்திரத்திற்கு உரிய மரங்களை வளர்ப்பதன் மூலமாக அந்தந்த நக்ஷத்திரக் காரர்கள் வாழ்வில் உயருவார்கள்.

அந்த வகையில் நக்ஷத்திரங்களும் அதற்கு உண்டான மரங்களையும் பார்ப்போம்.

1. அஸ்வினி – எட்டி

2. பரணி – நெல்லி

3. கிருத்திகை – அத்தி

4. ரோஹிணி – நாவல்

5. மிருகசீரிடம் – கருங்காலி

6. திருவாதிரை – செங்கருங்காலி

7. புனர்பூசம் – மூங்கில்

8. பூசம் – அரசு

9. ஆயில்யம் – புன்னை

10. மகம் – ஆல்

11. பூரம் – பலாசு

12. உத்திரம் – ஆத்தி

13. ஹஸ்தம் – அத்தி

14. சித்திரை – வில்வம்

15. ஸ்வாதி – நீர் மருது

16. விசாகம் – விளா

17. அனுசம் – மகிழம்

18. கேட்டை – பிராய்

19. மூலம் – மரா

20. பூராடம் – வஞ்சி

21. உத்திராடம் – பலா

22. திருவோணம் – எருக்கு

23. அவிட்டம் – வன்னி

24. சதயம் – கடம்பு

25. பூரட்டாதி – தேமா

26. உத்திரட்டாதி – வேம்பு

27. ரேவதி – இலுப்பை

அந்தந்த நக்ஷத்திற்கு உரியவர்கள் மேற்கண்டபடி அவர்களுக்கு உரிய மரத்தை வளர்த்தால் பல நன்மைகளை பெறுவார்கள்.