தோல் வியாதிக்கு காரணம் வாஸ்துவா

தோல் வியாதிக்கு காரணம் வாஸ்துவா?

நமது உடலில் ஏற்படும் தோல் வியாதிக்கும், நமது வீட்டு அமைப்பிற்கும் ஏதேனும் தொடர்புண்டா என்பதை பற்றி பார்ப்போம்.

நாம் வசிக்கும் வீடு சொந்த வீடாக இருந்தாலும் சரி வாடகை வீடாக இருந்தாலும் சரி வாஸ்து படியான விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்று தான்.

வரக்கூடிய நோய்கள்:

ஒருவருக்கு தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வருகிறது என்றால் அந்த வீட்டில் சூரிய ஒளி பற்றாக்குறையாக உள்ளது என்பதே முதல் காரணமாகும். அதே போல் ஒருவர் சாதரணமாக கண்ணாடி போட்டிருந்தாலும் சரி, பார்வை குறைபாட்டால் போட்டிருந்தாலும் சரி அவருடைய வீட்டு அமைப்பில் கிழக்கு, முழுவதும் அடைபட்ட அமைப்பு என்பதே உறுதி, இதே போல் தைராய்டு பிரச்சனைக்கும் அவர்களுடைய வீட்டு அமைப்பில் கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பே காரணமாகும்.

வாஸ்து குறைபாடு:

அந்த வகையில் நாம் குடியிருக்கும் வீட்டின் கிழக்கு பகுதி முழுவதும் அடிபட்ட அமைப்பு , காம்பவுண்ட் இல்லாத அமைப்பு, ஜன்னல்கள் இருந்தும் திறக்க முடியாத அமைப்பு, ஜன்னல்கள் திறக்கும் போதும் வானம் தெரியாத படி பக்கத்தில் கட்டிட அமைப்பு இருப்பதும் தவறே, கிழக்கில் நடு பகுதியில் கிணறு, சம்பு , போர், தண்ணீர் தொட்டி அமைப்பு , செப்டிக் டேங்க் , கழிவு நீர் தொட்டி போன்ற அமைப்புகள் இருப்பதும் வாஸ்து குறைபாடாகும்.

தீர்வுகள்:

நான் இங்கு குறிப்பிடும் படியான அமைப்புகள் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் வேறு வீடு மாறிக் கொள்வது நல்லது. முடியவில்லை என்றால் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டாலும் இது போன்ற பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

கிழக்கு மூடிய அமைப்பு அல்லது அடைப்பட்ட அமைப்புள்ள வீட்டில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறை பெளர்ணமி நன்னாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது சிறப்பாகும்.

P.M.K , 8220544911