தையல் கடைக்கான வாஸ்து அமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்ககூடிய நமது நண்பர்கள், நமது உறவினர்கள், மற்றும் நமக்கு எதிரில் தென்படக்கூடிய நபர்கள் போன்ற எவரேனும் அவர்கள் அணிந்து வரும் ஆடையை பார்த்து நாம் இந்த துணி எங்கு வாங்கிறீர்கள். இதன் விலை எவ்வளவு, இதனுடைய வேலை மிகவும் கலைநயம் மிக்கதாக இருக்கிறது. எனக்கும் இதை தைப்பவரின் முகவரி சொல்லமுடியுமா? என்கின்ற அளவில் நாம் கேட்கின்றோம்.
கலைநயம் மிக்க தையல் நிறுவனங்கள் நமது ஊரிலும் உண்டு என்பதை யாவரும் அறிந்ததே.‘ஆள் பாதி ஆடை பாதி' என்போம் இதே போல் நாம் உடுத்தும் உடைகளை நயம் மிக்கதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது தையல் கலைஞர்களே .
எனது அனுபவத்தில் ஒருசில கட்டிட அமைப்புகளில் உள்ள தையல் நிறுவனங்கள் உருவாக்க கூடிய ஆடைகள் தான் இது போல் கலைநயம் மிகுந்ததாக உருவாகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் அவர்களின் கட்டிட அமைப்புகள் இதுபோல் இருக்கும் பட்சத்தில் மிக கலைநயம் மிக்க வேலைகளை அவர்களால் உருவாக்க முடிகிறது.
தையல் கடைக்கான வாஸ்து அமைப்பு
- நிறுவனத்தின் கிழக்கு பகுதி முழுவதும் அடைபட்ட இடமாக முழுவதும் அடைபட்ட இடமாக இருக்க வேண்டும்.
- வடமேற்கு பகுதி வளர்ச்சி போன்ற அமைப்பு,
- ஒருசில தெருபார்வை அல்லது தெருகுத்து அமைப்பு,
- வடமேற்கு தாழ்வான கட்டிட அமைப்பு ,
- சில வகையான படி அமைப்புகள்
போன்றவை காரணமாக அமைகிறது மொத்த கட்டிட அமைப்பில் வடமேற்கு பகுதி மட்டும் உயரமான தரை . தளத்துடன் கூடிய அமைப்புகள் உள்ள இடத்தில் தையல் வேலைகளை செய்யும் போது நல்ல கலைநயம் மிக்க வேலைகளை உருவாக்க முடிகிறது.
பொதுவாக ஒரு மனிதன் பிரபலத்திற்கு காரணமாக அமைய கூடிய இடம் வட மேற்கு பகுதியே ஆகும்.