வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
82205-44911
வாஸ்துப்படி வீட்டில் தேனீ கூடு கட்டுவது நன்மையா? தீமையா?
தேனீ கூடு கட்டுவதற்கும் வாஸ்துவுக்கும் என்ன தொடர்பு?
இயற்கையிலேயே இந்த பிரபஞ்சம் பல அதிசயங்களை கொண்டுள்ளது. அதேபோல் இயற்கையை புரிந்து வாழ்பவர்களுக்கு என்றுமே கஷ்டங்கள் வருவதில்லை. அவர்கள் என்றுமே பிரச்சனையில் சிக்கி கொள்வதில்லை. அந்த வகையில் தேனீ கூடு கட்டுவதற்கும் மனித வாழ்க்கைக்கும் நெருங்கிய சில தொடர்புகள் உண்டு.
தேனீக்கள் கூடு கட்டக்கூடிய இடங்கள் :
1. மிகப்பெரிய வியாபாரஸ்தலங்கள்
2. அப்பார்ட்மெண்ட்
3. உபயோகமில்லாத கட்டிடங்கள்
4. மலை முகடுகள்
5. உயரமான மரங்கள்
6. சூரிய ஒளிகீற்று படாத இடங்கள்
7. ஆட்கள் நடமாட்டம், தொந்தரவு இல்லாத இடங்கள்
8. மிக சுத்தமான இடங்கள்
இங்கெல்லாம் தேனீக்கள் கூடுகட்டும்போது ஏற்படக்கூடிய அல்லது வரக்கூடிய பிரச்சனைகள்தான் என்ன?
1. ஆண்களின் ஆதிக்கம் வீழ்ச்சியடைகிறது.
2. பொருளாதார சரிவு ஏற்படுகிறது.
3. அந்த இடம் கடன் சுமைக்கு தள்ளப்படுகிறது.
4. பெண் சொத்தாக மாற வாய்ப்புள்ளது.
5. ஆண்கள் நோயால் பாதிக்கப்படக்கூடும்.
6. கண்பார்வையில் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
7. தோல் சம்மந்தமான வியாதி வர வாய்ப்புண்டு.
8. பெண் நிர்வாகமாக மாறி போகுதல்.
9. நிர்வாக சீர்குலைவு ஏற்படுதல்.
நம் குடியிருப்பு பகுதியில் பறவைகள் கூடுகட்டும்போது இதுபோல பல பாதிப்புகள் வரக்கூடும். சிறிய பறவையான சிட்டுக்குருவி முதல் மிகப்பெரிய பறவையான கழுகு வரையில் எது கூடு கட்டினாலும் பாதிப்பு என்பது உறுதி. பெரும்பாலும் பறவைகள் கூடுகட்டும் இடம் சுத்தமில்லாத இடமாக இருக்கும்.
பாதிப்புகள் :
1. குழந்தை பிறப்பு தள்ளிபோகுதல்
2. வறுமை, கடன்சுமை ஏற்படுதல்
3. மனநலம் தொடர்பான பிரச்சனைகள்
4. கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு
5. சொத்து ஏலம் போகும் அளவிற்கு கடன்சுமை
6. கலகம் ஏற்படுதல்
இதுபோல இயற்கையில் பல அறிகுறிகள் இருந்தாலும் காலப்போக்கில் யாரும் நமக்கு எடுத்து கூறாத பட்சத்தில் எது சரி, எது தவறு என்பதை உணர்வதற்குள் அனைத்து பிரச்சனைகளும் நடந்து முடிந்து விடுகிறது.