தெருகுத்து வருவதை எவ்வாறு கண்டறிவது மற்றும் தெருகுத்து பிரச்சனைகள்

    வாஸ்து நிபுணர் 
    P.ஆ.கிருஷ்ண ராஜன்
    8220544911

தெருகுத்து வருவதை எவ்வாறு கண்டறிவது :-

வடக்கு, மற்றும் கிழக்கு தெருகுத்து:

நண்பர்களே ஒரு வீட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்கு தெருகுத்து என்பது மிக

உன்னதமானது.இது போல் தெருகுத்து வருமானால் அவர்களால்  அவர்களின் தொழிலின் மூலம் 30 %  உழைப்புக்கு மேல் போனஸ்ஸாக கிடைக்கும் .

தென்கிழக்கில் தெற்கு தெருகுத்து:

 இது போல தெருகுத்து ஒரு வீட்டிற்கு வருமானால், அவர்கள் செய்யகூடிய தொழிலுக்கு நிறைய கூட்டம் வந்து செல்வார்கள். அதாவது நிறைய வாடிக்- கையாளர்கள் வந்து போவார்கள். இதுவும் உழைப்புக்குமேல் ஒருவகையான போனஸ் தான்.  

வடமேற்கில் மேற்கு  தெருகுத்து:

இது போல தெருகுத்து உள்ள இடத்தில் ஒருவரது வீடு அமைந்தாலும், தொழில் நிறுவனங்கள் அமைந்தாலும் உழைப்புக்கு மேல் 100%  பலன் கிடைக்கும். இது போல தெருகுத்து, தெரு பார்வை அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைவதில்லை, காரணம் இந்த தெருகுத்தை பற்றிய முழு விவரம் ஒரு சில வாஸ்து நிபுணர்கே தெரியும் .

வடமேற்கு  – வடக்கு

தென்கிழக்கு – கிழக்கு

தென்மேற்கு – தெற்கு

தென்மேற்கு – மேற்கு

இந்த நான்கு பகுதியிலும் தெருகுத்து தெருபார்வை வராமல் பார்த்து கொள்ள வேண்டும். இவைகள் மிக மிக ஆபத்தானவைகள். ஒரு வேலை நீங்கள் வாஸ்திய இடத்தில் இது போல தெரு அமைப்பு சந்தேகம் படும் படியாக இருக்குமேயானால் நான் கூறும் இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்குமானால் ,தெரு குத்து என்பது உறுதி .

 

  • இடம் வாங்கும்போதே அவர்கள் எந்த காரணத்திற்காக விற்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் .
  • வீடு கட்டும் போது பல முறை தடைகள் ஏற்படும்.
  • வீட்டின் மீது கடன் வாங்குதல்.
  • VRS வாங்குதல்.
  • தொழில் நஷ்டத்திற்கு சென்று விடும் ,அல்லது நஷ்டபடுத்தி விடும்.
  • ஜாமீன் ,கோர்ட் ,கேஸ் ,போன்றவை திடீர் என்று ஏற்படும்.
  • கணவன் மனைவியின் உறவில் விரிசல் ஏற்படும்.
  • ஆண்கள் விபத்தில் சிக்கிகொள்வார்கள்.
  • கிட்ணி ,பித்தப்பை ,முதுகுதண்டுவடம் ,பெண்களுக்கு கற்பப்பை போன்ற இடங்களில் பிரசனை ஏற்படும் .
  • வயது வந்த ஆண் ,பெண் ,காதல் திருமணம் செய்து கொள்வது.
  • மதம் மாறிய திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள்.
  • வேலையில் மாற்றம் , பணியிடை மாற்றம் .
  • ஆண்களுக்கு இடது காலிலும் ,பெண்களுக்கு இடது கையிலும் முறிவு ஏற்படும் .
  • இதய பிரச்சனை,ஸ்டோக் , பிரஷர்.

    இவைகள் போல இன்னும் குறிப்பிடும் படியான பிரச்சனைகள் உண்டு .