தென்மேற்கு படி அமைப்பின் நன்மை தீமை

தென்மேற்கு படி அமைப்பின் நன்மை தீமை

ஒரு வீட்டின் தென்மேற்கில் படி அமைப்புகள் வரும்போது அந்த வீட்டில் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

தென்மேற்கு படி அமைப்பு

மொத்த வீட்டு அமைப்பில் வீட்டிற்கு வெளிப்புறத்தில் படி அமைப்பு வருவது மிக சரியான அமைப்பு அதுவும் கேண்டிலீவர் முறையில் வருவது மிக மிக சிறப்பு .

தென்மேற்கில் வீட்டிற்குள் படி அமைப்பு எக்காரணம் கொண்டும் வருவது தவறு. மிக மிக ஆபத்தும் கூட, அதனால் ஏற்படும் தீமைகளே அதிகம்.

 

தீமைகள்

  1. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை முதலில் சீர்குலையும்.
  2. கணவன் மனைவி பிரிந்து வாழ நேரிடும்.
  3. விவாகரத்துக்குக் கூட வாய்ப்புண்டு.
  4. உத்தியோகம் தான் புருஷ லட்சணம் என்போம். அந்த உத்தியோகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு வாய்ப்புண்டு.
  5. காதல் திருமணம், உறவில் திருமணம், மதம் மாறிய திருமணம் போன்றவைகளுக்கு வாய்ப்புண்டு.
  6. மாமியாரின் சொத்து கிடைப்பது, மாமியாரை பராமரிக்கக்கூடிய சூழல் ஏற்படுவது.
  7. ஆண்களுக்கு முதுகு தண்டுவட பிரச்சனைகள் ஏற்படுவது.
  8. சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகள் ஏற்படுவது.
  9. அந்த வீட்டின் முதல் வாரிசு அல்லது மூன்றாவது வாரிசுக்கு திருமணம் தடைபடுவது.
  10. உறவினரின் உறவுகளில் விரிசல்.
  11. ஹார்ட் அட்டாக் ஏற்படுதல். வாஸ்து நிபுணர்P.M.கிருஷ்ண ராஜன்8220544911