தென்மேற்கு பகுதியின் மனை மற்றும் வீட்டு அமைப்புகள்
- தெற்கு மற்றும் மேற்குச் சாலைகள் உயரமாகவும், தெற்குச் சாலை மேற்கிலிருந்து கிழக்கிலும், மேற்குச் சாலை தெற்கிலிருந்து வடக்கிலும் சரிவுடன் இருத்தல் வேண்டும்.
- தெருக்குத்து இருந்தால் தென்கிழக்கு , வடமேற்கு ஆகிய உச்ச பகுதிகளிலேயே இருத்தல் வேண்டும். நீச்ச பகுதிகளில் அமைக்க கூடாது.
- மனை அமைப்புகள் நீள் சதுரம் அல்லது சதுரமாக இருத்தல் வேண்டும். அதாவது அகல நீளங்களின் விகிதம் 1 : 2 க்கு அதிகமாக இருக்க கூடாது.
- மனையின் தென்மேற்கு மூலை, மூலை மட்டத்திற்குச் சரியாக இருத்தல் வேண்டும்.
- மனையின் வடகிழக்கு மட்டும் வளர்ச்சி இருக்கலாம். மற்ற பகுதிகளில் வருவதை தவிர்க்கவும்.
- மனையின் எந்தத் திசையிலும் வெட்டு பட்ட அமைப்புகள் இருக்க கூடாது.
- மனை அமைப்பானது தென் மேற்கிலிருந்து வடகிழக்கு பகுதிக்கு தாழ்வாக இருக்க வேண்டும்.
- மழை நீர் தரைக்குமேல் வடகிழக்கிற்குச் சென்று, அங்கிருந்து தரைக்கு அடியில் வடமேற்கு அல்லது தென்கிழக்கு போன்ற உச்சப்பகுதிகளில் வெளியேருமாறு அமைக்க வேண்டும்.
- மதில் சுவர்கள் தெற்கு மற்றும் மேற்கு உயரமாகவும் , வடக்கு மற்றும் கிழக்கு தாழ்வாகவும் இருத்தல் வேண்டும்.
- மதில் சுவரின் வடகிழக்கிலும், தென்மேற்கிலும், வளைவு போன்ற அமைப்புகளை தவிர்க்கவும்.