திருவாதிரை நட்சத்திர பலன்கள்

                                                                                         திருவாதிரை நட்சத்திரம் !!
திருவாதிரை :

திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி : மிதுனம்
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி :புதன்

பொதுவான குணங்கள் :

  1. நல்ல புத்திசாலியாகவும், பேச்சுகளில் வல்லவராகவும் இருப்பார்கள்.
  2. கல்வியில் ஓரளவு நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  3. தந்திரமாக பேசி காரியங்களை முடிப்பவர்கள்.
  4. அழகான தோற்றம் கொண்டவர்கள்.
  5. அனைவருக்கும் நல்லவர்கள்.
  6. பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
  7. அழகான கண்களை கொண்டவர்கள்.
  8. பெரும் புகழுக்கு உரியவர்கள்.

திருவாதிரை முதல் பாதம் :

இவர்களிடம் மேற்கூறிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. எளிதில் பழகக்கூடியவர்.
  2. நற்குணங்களுக்கு சொந்தக்காரர்.
  3. ஆடம்பரமாக வாழ விருப்பம் உடையவர்கள்.
  4. கணக்கில் சாமர்த்தியசாலியானவர்கள்.
  5. இதமான, மகிழ்ச்சியான பேச்சுகளை பேசக் கூடியவர்கள்.

திருவாதிரை இரண்டாம் பாதம் :

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. முரட்டுச் சுபாவம் கொண்டவர்கள்.
  2. பிடிவாத குணம் உடையவர்கள்.
  3. கடுமையாக உழைக்கக்கூடியவர்கள்.
  4. உறவினர்களிடம் பகைமை உடையவர்கள்.
  5. சுயநலம் உடையவர்கள்.

திருவாதிரை மூன்றாம் பாதம் :

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. நிதானம் இல்லாதவர்கள்.
  2. திமிரான பேச்சுகளை பேசுபவர்கள்.
  3. புறம் பேசும் குணம் உடையவர்கள்.
  4. இரகசியம் உடையவர்கள்.
  5. புகழை விரும்பக்கூடியவர்கள்.

திருவாதிரை நான்காம் பாதம் :

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

  1. சாந்த குணம் உடையவர்கள்.
  2. வஞ்சக எண்ணம் கொண்டவர்கள்.
  3. ஞாபக மறதி உடையவர்கள்.
  4. எழுதுவதில் விருப்பம் உள்ளவர்கள்.
  5. விவேகமான முயற்சிகளை உடையவர்கள்.