திருட்டு, தீ விபத்துக்கு காரணம் – வாஸ்து குறைகளா?
கட்டிடங்களின் பாதுகாப்பு
நாம் கட்டக் கூடிய வீடுகளும் சரி… கம்பெனிகளும் சரி எந்த சேதாரமுமின்றி நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். மேலும், அந்த இடங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக விலையுயர்ந்த பூட்டுக்களையும், கதவுகளையும் வாங்கி பொருத்துவதுண்டு.
அதுமட்டுமின்றி, பகல், இரவு என இரண்டு வேளைகளிலும் பாதுகாப்புத் தேவை கருதி வாட்ச்மேன் வைத்து நம்முடைய இடத்தைக் கண்காணிப்பதுமுண்டு. அதாவது, நாம் வசிக்கின்ற வீடோ அல்லது நாம் நடத்துகின்ற கம்பெனியோ எதுவாக இருப்பினும் அதில் உள்ள உடைமைகளைப் பாதுகாக்கவே இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்.
தவறான திசை அமைப்புகள்
என்னுடைய அனுபவத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே திருட்டு போகிறது. அதேபோல், ஒரு சில இடங்களில் மட்டுமே தீ விபத்தும் ஏற்படுகிறது. இதற்கான காரணம் என்னவென்று நாம் ஆராயும் பொழுது, அந்த கட்டிட அமைப்பில் தென் கிழக்குத் திசையில் உள்ள சில தவறுகள் ஆகும்.
மூடிய கட்டிட அமைப்பு , தெருக்குத்து, அமைப்பு,தெருப்பார்வை , கோணல் மானலான வீட்டமைப்பு இது போல பல தவறுகள் காரணமாக அமைகின்றன.
காரணிகள்
இது போன்ற தவறான கட்டட அமைப்புகள் உள்ள இடங்களைத் திருடன் கடந்து போகும்போது அவனுடைய தீய எண்ணம் மேலும் தூண்டப்பட்டு அவனைத் திருட வைக்கிறது. அதே போன்றுதான் தவறான அமைப்புகள் உள்ள இடங்களும் தீ விபத்தும் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.
இன்னும் சொல்லப்போனால் அந்த தவறான அமைப்புள்ள இடங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கோ, கம்பெனிகளுக்கோ அல்லது அங்குள்ள பொருட்களுக்கோ ஆயுட்காலம் குறைவு என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை …
P.M.K, 82205-44911