தாழ்வுமனப்பான்மையை நீக்க வேண்டுமா?
உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால் முதலில்
அதை நீங்கள் ஒழிக்க வேண்டும்.
தாழ்வு மனப்பான்மைதான் உங்கள் முன்னேற்றத்திற்கு மிக பெரிய தடை கல்லாகும்.
தாழ்வு மனப்பான்மை ஒருவரது தன்னம்பிக்கையை தகர்த்து எறிந்து விடும்.
எதையும் தோல்விகரமான மனப்பான்மையிலேயே எண்ண தோன்றும்.
தாழ்வு மனப்பான்மை உங்கள் தோற்றத்தையே மாற்றி மற்றவர்கள் உங்களை வெறுக்கும் அளவுக்கு செய்து விடும்.
தாழ்வு மனப்பான்மையை உங்கள் மனதிலிருந்து விரட்ட வேண்டும் என்றால் முதலில் நம்பிக்கை எனும் விதையை உங்கள் மனதில் விதிக்க வேண்டும்.
நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற நம்பிக்கை விதையை மனதில் ஊட்டி தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறியுங்கள்..
ஆம்.,நண்பர்களே.,
உங்களின் உடந்தையில்லாமல் உங்களை யாரும் தாழ்த்திவிட முடியாது.
நீங்கள் தாழ்வக உணர்ந்தால் அதை செய்தவர் நீங்களே. ஆக இது போன்ற சூழ்நிலையிலே உங்களை உயர்த்திப் பிடிக்கிற ஒரே ஆள் உங்க மனம்தான்.
மற்றவர்கள் அவமானப்படுத்தும்போது, கோபப்படுத்தும்போது, உங்களுக்குள்ள இடத்தை பறிக்கும்போது,
• அவசரப்படாதீர்கள்
• ஆத்திரப்படாதீர்கள்
• கொஞ்சம் நிதானத்தை கையிலெடுங்கள்.
• உங்கள் மனதை தயார் படுத்துவதில்தான் உங்கள் வெற்றியே அமையும்.