தலைவாசல் தெற்கு மற்றும் மேற்கு திசையில் எங்கு வைத்தால் நன்மை எங்கு வைத்தால் தீமை?
தெற்கு வாசல் :
நம்முடைய வீட்டிற்கு தெற்குவாசல் என்பது கிழக்கு சார்ந்து மட்டுமே வரவேண்டும். தெற்கு வாசல் வைக்கும்போது அதே நேர் வடக்கு பகுதியிலும் வாசல் வைப்பதே மிக மிக சிறப்பைத் தரும். வடக்கு வாசல் உள்ள வீட்டில் எவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்குமோ அதேபோல பலன் தரவல்லது. இந்த இரண்டு வாசல் அமைப்பு.
தெற்குவாசல் நடுபகுதியிலேயோ மேற்கு சார்ந்தோ வருவது மிகப்பெரிய தவறு. இதனால் பல பல கெடுதலான பலன்கள் அந்த வீட்டு ஆண் பெண் இருபாலருக்குமே இருக்கும்.
1. கணவன் மனைவி பிரிந்து வாழ நேரிடும்.
2. திருமணம் தடைபடுதல்
3. குழந்தை பிறப்பு தள்ளி போகுதல்.
4. VRS வாங்குதல்
5. கடன் சுமை.
6. தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவது
7 பில்லி சூனியம் போன்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும்
8 இருதையம், கற்பை, ரீதியான பாதிப்புகள் கூட வர வாய்ப்புண்டு.
மேற்கு வாசல் :
நம்முடைய வீட்டிற்கு மேற்கு வாசல் என்பது வடக்கு சார்ந்து வருவதே சிறப்பை தரும். நடுபகுதியோ அல்லது தெற்கு சார்ந்து வருவது மிக தவறு. இங்கு மேற்கு வாசல் வரும்போது கிழக்கு வாசல் வர வேண்டும்.
கிழக்கு வாசல் வைக்கும்போது என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அதே போல் இரண்டு வாசல் வரும்போது கிடைக்கும். தவறான வாசல் அமைப்பு என்றால் அதனுடைய கெட்ட பலன்கள் வீட்டில் உள்ள ஆண் பெண் இருவர் மீதும் இருக்கும்.
1. கலப்பு திருமணம் அல்லது காதல் திருமணம்.
2. சன்னியாசி வாழ்க்கை.
3. வியாபார நஷ்டம்.
4. அடிக்கடி விபத்து ஏற்படுதல்.
5. தற்கொலை முயற்சி.
6. வேலையில் அடிக்கடி இடமாற்றம்.
7. நிரந்தர வருமானம் இல்லாமல் இருப்பது
8 கடனுக்க சொத்து ஏலம் போகுதல் போன்றவை ஏற்படும்
9 வெளி நாடுகளில் சென்று அங்கே தங்கி விடுதல்
ஒவ்வொரு வீட்டிற்கும் தலைவாசல் என்பது ரோடு அமைப்புக்கும் திசைக்காட்டிக்கும் ஏற்ப மாறுபடும். சரியான வாஸ்து நிபுணரின் ஆலோசணைக்கு பிறகுதான் நன்மைகள் தீமைகள் பற்றி தீர்மானிக்க முடியும். வாஸ்து சாஸ்த்திரத்திலேயே தலைவாசல் தான் 'உயிர்"