தக்காளி தொக்கு செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
தக்காளி _ 1 கிலோ
பூண்டு – கால் கிலோ
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவையானவை
வறுத்து பொடிக்க:
வெந்தயம் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
தனியா – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 25
செய்முறை:
தக்காளி ,உப்பு, புளி சேர்த்து நன்கு அரைக்கவும். பூண்டை தோல்உரித்து கொள்ளவும்.
வறுக்க கொடுத்துள்ள பொருள்களை வறுத்து ஒன்றாக அரைத்து கொள்ளவும்.
எண்ணையை காய வைத்து கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து பூண்டை சேருங்கள்.
5 நிமிடங்கள் வதங்கிய பின்அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
தண்ணீர் வற்றி சிறிது சேர்ந்தாற் போல் வரும் போது பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளரி இறக்கவும்.