ட மற்றும் ப வடிவ கட்டிட அமைப்பின் தீமைகள்

வாஸ்து நிபுணர் 
P.ஆ.கிருஷ்ண ராஜன்
 82205-44911

'ட", 'ப" வடிவ கட்டிட அமைப்பின் தீமைகள்…!

 இன்றைக்கு தமிழ்நாட்டில் 'ட", 'ப" வடிவத்தில் பல கட்டிட அமைப்புகளை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் கட்டிட துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் ஆர்க்கிடெக்கின் திறமைகள் என கூறலாம்.

 அடிப்படையில் ஒரு கட்டிடம் சதுரம், செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும். அதை விடுத்து 'ட", 'ப" வடிவ கட்டிட அமைப்புகள் உருவாகும்போது ஏற்படும் விளைவுகள் என்னென்ன? என்பது பற்றி பார்ப்போம்.

'ட" வடிவ கட்டிட அமைப்பின் தீமைகள் :

  •  வடகிழக்கு வெட்டுபட்டு தென்கிழக்கு வளர்ந்த கட்டிட அமைப்பின் பலன்களை பார்ப்போம்.
  •  திருட்டு, தீ விபத்து
  •  கோர்ட், கேஸ்
  •  ஆண் சந்ததியோ அல்லது பெண் சந்ததியோ ஏதோ ஒன்று மட்டும் இருப்பது. 
  •  பெண்கள் மட்டும் நோய்வாய்ப்படுதல்
  •  குழந்தை பிறப்பு தள்ளி போகுதல்
  •  பெண் சொத்தாக மாறி போகுதல்
  •  அரசு வேலை இருந்தும் வறுமை நிலையில் வாழ்தல்
  •  அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்ளுதல்
  •  மனநல பிரச்சனை வருதல்
  •  அளவுக்கு அதிகமான கடன் சுமை
  •  குடும்பத்தில் பிரிவினை ஏற்படுதல் போன்றவையாகும்.

'ப" வடிவ கட்டிட அமைப்பின் தீமைகள் :

 இதுபோன்ற கட்டிட அமைப்புகள் பெரும்பாலும் கமர்சியலுக்காகவும், அபார்ட்மென்ட், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்காகவும் கட்டப்படுகிறது. அபார்ட்மென்டில், வடகிழக்கு பகுதியில் வரக்கூடிய வீடுகள் அனைத்தும் தவறே.

 இன்றைய சூழலில் இதுபோல கட்டிட அமைப்புகளில் பல இடங்களில் ஒரு மூலையை வெட்டிய அமைப்பில் கட்டிடம் கட்டுகிறார்கள். அதில் போர்டிக்கோ அமைப்பை உருவாக்கி அதில் கார் பார்கிங் போட்டுக் கொள்கிறார்கள். இவைகள் மிக ஆபத்தானவைகள். 

 காரணம், வீட்டின் ஆண் வாரிசு மூத்த வாரிசாக இருந்தால், அவர் வீட்டை விட்டு வெளியே தங்கக்கூடிய சூழ்நிலையிலேயே அவருடைய வாழ்க்கை அமைகிறது. தந்தை மகன் கருத்து வேறுபாடு, திறமைக்கு ஏற்ற வேலையில்லாத நிலை, நிரந்தர வேலை இல்லாத நிலை, திருமணம் ஆகாத நிலை, ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறுதல், மனநலம், ஒற்றை தலைவலி, காது கேட்காமை, திறனில் பாதிப்பு என இதுபோல இன்னும் சில பாதிப்புகளும் உண்டு. இடத்திற்கு இடம் ஆட்களுக்கு ஆட்கள் மாறுபடும்.