டீ கடைகளுக்கு வாஸ்து அவசியமா?
இன்றைய நிலை
கடந்த இருபது வருடங்களில் நமது ஊரில் பழைய டீ கடைகளுக்கு பதிலாக பேக்கரி என்ற பெயரில் டீ கடைகள் தெருவுக்கு நான்கு வீதம் புதிதாக உருவாக்கி விட்டது. இவற்றில் ஒரு சில கடைகள் மட்டுமே மிகவும் பிரபலமாக திகழ்கிறது. அதற்க்கு காரணம் "வாஸ்துவா?" என்பதை பற்றி இன்று அறிவோம்.
டீக்கடையும், வாஸ்துவும்
ஒரு ஊரில் 50 அல்லது 100 கடைகள் இருக்கும் பட்சத்தில் விரல் விட்டு என்னும் அளவில் சில கடைகள் மட்டுமே பிரபலமானவைகளாக அமைகிறது. அதற்கு காரணம் அந்த கடைக்கு இயற்கையிலேயே நல்ல தெருக்குத்து அமைப்பும், நல்ல தெரு பார்வை அமைப்பும், உள்ளதே காரணம். வடகிழக்கு, தென்கிழக்கு, வட மேற்கு என உள் அமைப்புகள் ஒரு சில வாஸ்து விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டதும் காரணமாகும்.
விதிமுறைகள்
எனது அனுபவத்தில் வாஸ்து சாஸ்திர விதிமுறைகளுக்கு எதிரான அமைப்புகள் உள்ள பேக்கரிகளும் மிக பிரபலமாகி இருப்பதை பார்த்திருக்கிறேன். அதற்க்கு காரணம் பல உண்டு. அவற்றில் ஒன்று , குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து நடத்தப்படும் பேக்கரி கடை சிறப்பாக ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன். இதுப்போல் 16 வகை காரணங்கள் உண்டு. அவைகள் அனைத்தையும் குறிப்பிட இயலாது.
எந்த தொழிலானாலும் வாஸ்து விதிமுறைகளை கடைப்பிடித்து செய்யும் போது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை . வாஸ்து விதிமுறைகளை மீறும்போது பல பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுவும் அதை நிர்வகிப்பவர் மீதோ அல்லது அதன் உரிமையாளர் மீதோ தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
P.M.K , 8220544911