ஞாபக சக்திக்கு வல்லாரை…
வல்லாரை ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும்.
சர்வ வல்லமை மிக்க கீரையாக வல்லாரைக் கீரை விளங்குகிறது. இந்தக் கீரையுடன் பால் கலந்து அரைத்து சாப்பிட வேண்டும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.
ஞாபக சக்திக்கு இதை விடச் சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.
வல்லாரை கீரை உடலில் உள்ள ரத்தத்தை சுத்திரிக்கிறது.
தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய், பசி, தாகம், படை போன்றவற்றைக் குணப்படுத்தும்.
இந்த கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
வல்லாரைக் கீரையை தினம் ஒருகைப் பிடி அளவு எடுத்து அரைத்து, வாயில் போட்டுப் பசும்பால் குடித்து வந்தால், மாலைக் கண் பாதிப்பு படிப்படியாக அகலும்.
இளம் பருவத்தினர் காலை வேளைகளில் இதைப் பச்சையாக மென்று தின்று வந்தால், மூளை பலம் பெறுவதோடு மட்டுமலாமல், ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
வல்லாரைக் கீரையையும் மிளகையும் சேர்த்துப் பச்சையாக மென்று தின்று வந்தால், உடல் சூடு தணியும்.
இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.