ஜாதக படி உங்களுடைய வீடு, வாகன அமைப்பு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ள வேண்டுமா

ஜாதக படி உங்களுடைய வீடு, வாகன அமைப்பு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

On – Line (Phone Call Whatsapp) மூலமாக ஜோதிட பலன் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.

வீடு, வாகனம் , இடம் :

ஒருவருடைய ஜாதகத்தில் 4ம் பாவம் என்பது இடம், வீடு, வாகனம் போன்றவற்றை குறிக்கும். ஒருவருடைய விதி கொடுப்பினை எவ்வாறு உள்ளதோ அதன்படி வீடு வாகனம் அமையும்.

1 ம் பாவம் 4 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஒருவருடைய மூளையில் வீட்டை பற்றிய சிந்தனை ஓட்டிக்கொண்டே இருக்கும்.

2 ம் பாவம் 4 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் கையில் உள்ள பணத்தை கொண்டு இடம், வீடு வாங்குபவராக இருப்பார்.

3 ம் பாவம் 4 ம் பாவத்தை தொடர்பு ஒப்பந்தங்கள் போட்டு இடம், வீடு வாங்குபவராக இருப்பார்.

4 ம் பாவம் 4 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் உள்ளூரிலேயே வீடு கட்டுவார்.

4 ம் பாவம் 5 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் வீடு அழகாகவும் கலைநயத்துடன் வீட்டைக் கட்டுவார்.

4 ம் பாவம் 6 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் கடன் வாங்கி வீடு கட்டுவார்.

4 ம் பாவம் 7 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் மனைவி பெயரில் வீடு கட்டுவார்.

4 ம் பாவம் 8 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் வீடு கட்டி அதனால் கடன் ஏற்பட்டு அதனால் சிரமப்படுவார்.

4 ம் பாவம் 9 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் பூர்விக இடத்தில் வீடு கட்டுவார்.

4 ம் பாவம் 10 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் வீடு கட்டி விற்பனை செய்வது. அதை  தொழிலாக செய்பவராக இருப்பார்.

4 ம் பாவம் 11 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் வீடு கட்டியதின் மூலம் வாழ்வில் ஒரு திருப்தியுடன் வாழ்பவர்.

4 ம் பாவம் 12 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் இடம் விற்பனை செய்து வீடு கட்டுபவராக இருப்பார்.

 

கிரகங்கள் :

இடம், வீடு பொருத்தமட்டில் செவ்வாய் நிலத்துக்கு சொந்தமான கிரகம் வீடு கட்டுவதற்கு சுக்கிரன் கிரகமாக இருக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் வீடு அமைய இந்த இரண்டு கிரகங்களையும் பார்க்க வேண்டும்.

4 ம் பாவம் சூரியனாக இருந்தால் தந்தை வழி சொத்து அரசாங்க கோட்ரஸில் வாழும் அமைப்பு கிடைக்கும்.

4 ம் பாவம் சந்திரனாக இருந்தால் அம்மா மூலம் சொத்து வீடு அமையும்.

4 ம் பாவம் செவ்வாயாக இருந்தால் விவசாய நிலத்தில் வீடு கட்டுபவராக இருப்பார்.

4 ம் பாவம் ராகுவாக இருந்தால் பிரமாண்டமான  வீடு கட்டுவார்.

4 ம் பாவம் குருவாக இருந்தால் கோவில் அல்லது பள்ளிக்கூடம் அருகே வீடு கட்டுபவராக இருப்பார்.

4 ம் பாவம் சனியாக இருந்தால் பூர்விக இடம் அல்லது கிரமா பகுதியில் வீடு கட்டுபவராக இருப்பார்.

4 ம் பாவம் புதனாக இருந்தால் ஒரு வீட்டிற்கு இரண்டு வீடு கட்டுபவர்.

4 ம் பாவம் கேதுவாக அமைந்தால் குறுக்கு சந்தில் வீடு கடுபவராக இருப்பார்.

4 ம் பாவம் சுக்கிரனாக இருந்தால் அப்பாட்மெண்ட் டைப் வீடு கட்டுவர்.

பொதுவாக 4 ம் பாவத்தில் 2,4,6,10 பாவ தொடர்புகள் இருந்தால் வீடு கட்டி வாடகை வாங்கும் யோகம் உண்டு.

4 ம் பாவம் 1,3,5,7,9,11 போன்ற தொடர்புகள் இருந்தால் இவரது வாழ்வில் இடம் இருந்தாலும் வீடு கட்ட இயலாது.

4 ம் பாவம் 2,4,6,10 போன்ற தொடர்புகள் இருந்தால் இடம் விற்பனை செய்ய நினைத்தாலும் விற்பனை செய்ய இயலாது.

ஜாதகம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். ஜாதகம் இல்லாதவர்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் போன்ற தகவல் இருந்தால் போதும்.

நன்றி

 

அகோபிலம் ஜெகதீஸ்

ஜோதிடர் – 9394909036