சூரியனின் காரகம்
இறைவன் இருக்கின்றானா? எங்கே காட்டுங்கள்? என்று நாத்திகம் பேசுவோருக்கு நெத்தியடி கொடுக்கும் கண் கண்ட தெய்வம் சூரியன். சூரியனது காரகத்துவம் என்ன என்பதை அறியலாம்.
தந்தை, தந்தைவழி உறவினர்கள், அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள்,பிரயாணம் செய்பவர்கள், வீரர்கள், இடையர்கள், விவசாயம், மருத்துவம்,தீயவர்கள்,சிவப்பு நிறம், காரம், நெருப்பு, பாதரசம், மாணிக்கக் கற்கள், கோதுமை, தேன், தங்க நகைகள்,செம்பு உலோகம், ஒன்றாம் எண், விஷமருந்துகள்,கெட்டிதுணிகள்,அரசாங்க வேலை,விதை,மரம்,ஞாயிற்றுக் கிழமை,காடு,மலை,யோகம்,கிழக்குதிசை,மூளை,ஆத்மசக்தி,துணிவு,தைரியம்,வெற்றி,சத்வகுணம்,தவம்,பக்கபலம்,உடல்நலம்,சொகுசு,வலது கண்,தலை,எலும்பு,மார்பு,ஆயுள் பாவம்,உஸ்ண சம்பந்தப்பட்ட நோய்கள்,பித்தம் ஆகியனவற்றுக்கு சூரியனே காரகன் ஆவார்.
நாம் அன்றாடம் வணங்கும் விதமாக நமக்கு நேரில் காட்சி தரும் நவக்கிரகங்களில் முதன்மையானவரும் உயிரினங்களை வாழ வைப்பவருமான சூரியனை வணங்குவோமாக.