சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக என்ன தொழில் செய்யலாம்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள்  பொதுவாக என்ன தொழில் செய்யலாம்?

 

முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலும் சாதனையை படைக்கலாம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்கிறது ஆன்றோர் மொழி. எனினும், எனது லக்கன படி நான் என்ன தொழில் செய்யலாம்? அல்லது செய்தால் ஓரளவு வெற்றி பெற முடியும்? என்று கேட்பவர்களுக்காக நான் லக்கன அடிப்படையில் சில தொழில் ஆலோசனைகளை அளித்து உள்ளேன். உங்கள் சொந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் நன்றாக வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் தாராளமாக கீழ்கண்ட தொழில்களை நீங்கள் செய்யலாம். அந்த விவரங்கள் வருமாறு…

 

 

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம லக்கன அன்பர்கள்,

அரசியல் சம்மந்தமான துறை,

அரசுத் துறை,

சிவப்பு வண்ண கற்களை விற்கும் தொழில்,

மாந்திரீகம்,

மிளகாய்,

பூண்டு அல்லது வெங்காய வியாபாரம்,

இரசாயன வியாபாரம்,

காகிதம்,

தாவரப் பொருள்கள் வியாபாரம்,

புகையிலை,

சிகரெட் வியாபாரம்,

வழக்கறிஞர்,

மர வியாபாரம்,

கற்பூரம் – ஊதுபத்தி வியாபாரம்,

கட்டுமானத் துறை

போன்ற ஏதேனும் ஒரு தொழில் அல்லது உத்யோகம் பார்த்தால் சிறப்பாக இருப்பார்கள்.