சாப்பிடும் பொருட்களை கனவில் கண்டால் நடக்கும் பலன்கள்..!
- காப்பி சாப்பிடுவது போலக் கனவு கண்டால் சுபச் செய்திகள் தேடி வரும்.
- ஜாம் சாப்பிடுவது போலக் கனவு கண்டால் வீட்டில் நல்ல காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
- உப்பைக் கனவில் கண்டால் பணம், பொருள் கூடும்.
- கோதுமை, அரிசி இவைகளைக் கனவில் கண்டால் செல்வம் வந்து சேரும்.
- கோழி முட்டையைக் கனவில் கண்டால் தொழில், வியாபாரம் சிறந்து விளங்கும்.
- பசியால் வருந்துவது போலக் கனவு கண்டால் வறுமை வரலாம். செல்வங்கள் கூட கரையலாம்.
- வெல்லத்தைத் திண்பதாகக் கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
- தயிர் குடிப்பதாகக் கனவு கண்டால் எல்லா வகையிலும் நல்லது. லஷ்மி கடாக்ஷம் உண்டு.
- சூடான பொருட்களை உண்பது போலக் கனவு கண்டால் வெகு நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- ரொட்டியைத் திண்பது போலக் கனவு கண்டால் வறுமை வந்து சேரும்.
- புளிப்பான பண்டங்களை உண்பது போலக் கனவு கண்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும்.
- பருப்பை எந்த ரூபத்தில் கண்டாலும் பகைவர்கள் விலகுவார்கள்.
- பட்டாணியைக் கனவில் கண்டால் மங்கள காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.
- இறந்த மீன் அல்லது கருவாட்டைக் கனவில் கண்டால் பகைவர்களின் தொல்லை ஏற்படும்.