மக்களிடையே மண்டிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளுள் சகுன நம்பிக்கையும் ஒன்று. இதனால் ஏற்படும் பாதிப்புகள், கேடுகள், இழப்புகள் ஏராளம் என்பதோடு இவை உருவாக்கும் மன உளைச்சல், வீண்பழி, மனத்தளர்ச்சி, வாழ்விழப்பு போன்றவை ஏராளம். குறிப்பாக, விதவைப் பெண்களும், திருமணத்தை எதிர்நோக்கும் இளம்பெண்களும் அடையும் இழப்பும், இன்னல்களும் ஏராளம். ஒரு பெண்ணின் வாழ்வையே பல்லியின் ஓசையில் பலிகொடுக்கும் அவலமும் இதில் அடங்கும். எனவே, சகுனம் பற்றிய விழிப்புணர்வு பிஞ்சுகளுக்கேயன்றி பெரியவர்களுக்கும் வேண்டும்.
பூனையிலேயே செம்பூனை, கருப்பு பூனை என்றெல்லாம் இருக்கிறது.
இதில் வலம் போவது, இடம் போவது என்று இருக்கிறது. பொதுவாக பூனையைப் பொறுத்தவரை வலமிருந்து இடம் போனால் மிகுந்த நன்மை உண்டாகும். அது உண்மை. இடமிருந்து வலம் போனால் கொஞ்சம் சிக்கல் உண்டாகும்.
அமங்கலி வந்தால் கெட்டது என்பதெல்லாம் தவறு. அமங்கலியாக இருந்தாலும், நல்ல மனது இருந்தால் அவர்கள் எதிரே வந்தால் நல்லதுதான். சுமங்கலியாக இருந்து அவர்கள் கெட்ட எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் எதிரே வந்தால் கெடுதல்தான் நடக்கும்.
நாம் வீட்டிலிருந்து கிளம்பி, வீடு கண்ணுக்குத் தெரியாத தூரம் வரை செல்வதற்குள், நமக்கு எதிரே வரும் நபர், தங்கம், பால், தயிர், நெய், தேன், மஞ்சள், குங்குமம், பூக்கள், பழங்கள், நவரத்னங்கள், புதிய வேஷ்டி-புடவை போன்ற புத்தம் புதிய ஆடைகள், மீன் அரிசி போன்றவைகளுடன் எதிரில் வருவது சுப (நல்ல) சகுனம்.