கோமதி சக்கரம்

சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வளவோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருகின்றன என்பதை நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மாகன்களும் விரும்பினார்கள் .அதற்கேற்ப பல்வேறு வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ராமர் கணையாழி 
ராமபிரான் , ஆஞ்சநேயர் மூலம் சீதாதேவிக்கு தன்னை அடையாளம் காட்ட கொடுத்தது ரகுவம்ச கணையாழி ஆகும்.அதில் கோமதி சக்கரம் பாதிக்கப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது .

பிள்ளையார் சுழி 
கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதிகளும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும்  இடம் என்று கூறுகின்றனர்.லக்னோவில் கோமதி நதியும் ,அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது.இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன.
நட்சத்திர பாகங்கள் 
அவரவருக்கு உரிய நட்சத்திரத்திற்குரிய பாகத்தை அறிந்து அந்த பகுதியை தொட்டோ அல்லது மனதில் நினைத்தோ தெய்வத்தை வழிபடுவதன் மூலமாக பூரண அருளை பெற முடியும் என்பது ரகசிய பூஜை வழிமுறையாக இருந்து வருகிறது.
அசுவினி,பரணி,கிருத்திகை – நெற்றி
ரோகினி,மிருகசீரிஷம்,திருவாதிரை – முப்பகுதி 
புனர்பூசம்,பூசம் –இரு தோள்கள்
சித்திரை –வயிற்று பகுதி 
கேட்டை, மூலம் – இரண்டு கைகள்