கொத்தவரங்காய் பச்சடி

கொத்தவரங்காய்

பச்சடி

தேவையான பொருட்கள் :

கொத்தவரங்காய் – 150 கிராம் (பொடியாக நறுக்கவும்)

சின்ன வெங்காயம் – 6 உரித்து நறுக்கியது

கறிவேப்பிலை – சிறிது

தக்காளி – சிறியதாக 1 நறுக்கியது

துவரம் பருப்பு – 1 கப்

மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்

குழம்புப் பொடி – 1 டீஸ்பூன்

புளி – சிறிய எலுமிச்சையளவு

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு, உளுந்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

செய்முறை :

துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சட்டியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வெடித்தவுடன், கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, கொத்தவரங்காய் போட்டு நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் வேக வைத்த பருப்பு, புளிக் கரைசல், உப்பு, குழம்புப் பொடி போட்டு வேக விட வேண்டும்.

வெந்தவுடன் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.