கேட்டை நட்சத்திர குணாதிசியங்கள் !!

                                                                           கேட்டை நட்சத்திர குணாதிசியங்கள்  !!
கேட்டை :
கேட்டை நட்சத்திரத்தின்  இராசி : விருச்சிகம்
கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி : புதன்
கேட்டை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : செவ்வாய்

பொதுவான குணங்கள் :

 

  1. இனிய சுபாவம் உடையவர்கள்.
  2. அழகான தோற்றம் கொண்டவர்கள்.
  3. நிதானமானவர்கள்.
  4. சில நேரங்களில் பயம் நிறைந்தவர்கள்.
  5. பிறரின் அறிவுரைகளை விரும்பாதவர்கள்.
  6. செல்வாக்கு நிறைந்தவர்கள்.
  7. உண்மையை பேசக்கூடியவர்கள்.
  8. இறை நம்பிக்கை உடையவர்கள்.
  9. உடன் பிறப்புகள் மீது அன்பு கொண்டவர்கள்.
  10. உணவுப் பிரியர்கள்.
  11. தலைமை அதிகாரிகளுக்கு பிரியமானவர்.
  12. பொய்யையும்  உண்மை போல பேசக் கூடியவர்கள்.
  13. கல்வியில் தேர்ச்சி உடையவர்கள்.
  14. தைரியமும், துணிச்சலும் இயல்பாக இருக்கும்.
  15. நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள்.
  16. அழகான சுருக்கமான பேச்சுகளில் சிறந்தவர்கள்.

கேட்டை முதல் பாதம் :

இவர்களிடம் கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 

  1. சாதிப்பதற்கான முயற்சியில்ஈடுபடுபவர்கள்.
  2. விளையாட்டு செய்கை உடையவர்கள்.
  3. மகிழ்ச்சியான மனம் உள்ளவர்கள்.
  4. குழப்பம் நிறைந்தவர்கள்.
  5. சினம் அதிகமாக கொண்டவர்கள்.
  6. வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்.
  7. நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள்.

கேட்டை இரண்டாம் பாதம் :

இவர்களிடம் கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 

  1. புகழை விரும்பக்கூடியவர்கள்.
  2. சங்கீதத்தில் விருப்பம் உடையவர்கள்.
  3. கொடைக்குணம் கொண்டவர்கள்.
  4. சுகவாளர்கள்.
  5. குடும்பத்தை பேணி காப்பார்கள்.
  6. பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.
  7. தேக சுகத்தை விரும்புபவர்கள்.
  8. உடல் நலத்தில் கவனம் இல்லாதவர்கள்.

கேட்டை மூன்றாம் பாதம் :

இவர்களிடம் கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 

  1. ஆன்மிகத் தேடல் உடையவர்கள்.
  2. கலைகளில் விருப்பம் உடையவர்கள்.
  3. பின்  புத்தி உடையவர்கள்.
  4. பிறருக்காக உழைக்கக்கூடியவர்கள்.
  5. அமைதியானவர்கள்.

கேட்டை நான்காம் பாதம் :

இவர்களிடம் கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

 

  1. அழகான தோற்றம் உடையவர்கள்.
  2. ஆடம்பரங்களில் பிரியம் இருக்கும்.
  3. ரகசியம் கொண்டவர்கள்.
  4. தெய்வபக்தி உடையவர்கள்.
  5. பேச்சுத்திறமை உடையவர்கள்.
  6. எழுத்துத்திறமை உடையவர்கள்.