குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு – வாஸ்து சாஸ்திரம் காரணமா

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911

குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு – வாஸ்து சாஸ்திரம் காரணமா?

 குழந்தை பாக்கியம் தள்ளிப்போவதற்கும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போவதற்கும் வாஸ்து சாஸ்திரம் ஒரு காரணமா? என்பதைப் பற்றி அறிவோம். 

 குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலை சொல் கேளாதவர். இது சான்றோர் வாக்கு. 

 ஒரு குடும்பத்தில் திருமணமான இளம் தம்பதியினருக்கு திருமணமான சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் குழந்தை பாக்கியம் என்பது கிடைக்க வேண்டும். குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும் பட்சத்தில் அந்த பெண்ணிற்கு இந்த சமுதாயம் கொடுக்கும் பட்டம் மலடி என்பார்கள். 

 குழந்தை பாக்கியத்திற்காக அந்த காலத்தில் அரசமரத்தை சுற்றிய காலங்கள் உண்டு. ஆனால் இன்று அடுக்குமாடி மருத்துவமனைகள் ஏராளம் ஏராளம். மருத்துவரை நம்பி பல லட்சங்களை இழந்தும் பாக்கியம் கிடைப்பதே சில பேருக்கு மட்டும் தான். 

 இன்னும் சில பேர் பல முயற்சிகள் எடுத்து பலனளிக்காமல் கடைசியாக தனக்கும் தன்னுடைய சொத்திற்கும் தன்னை கடைசி காலத்தில் பார்த்துக் கொள்வதற்காக யாரோ ஒருவருடைய குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறார்கள். இவைகள் யாவும் நமது சமுதாயத்தில் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. 

 நமது வீட்டில் எந்த பகுதியில் என்ன தவறு இருந்தால் இதுபோல் தவறு ஏற்படும். அதை எப்படி சரி செய்வது. 

1. கிழக்கு பகுதி முழுவதும் அடைப்பட்ட வீட்டு அமைப்பு

2. தென்கிழக்கு பகுதியில் கிழக்கு தெருக்குத்து தெரு பார்வை அமைப்புகள்

3. செப்டிக்டேங்க் தென்கிழக்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதியில்

4. கோபுர கேஸ் தென்கிழக்கு பகுதியில் மற்றும் தென்மேற்கு பகுதியில்

5. உள் மூலைப்படி அமைப்புகள்

6. போர் கிணறு சம்பு அல்லது தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகள். தென்மேற்கு வடமேற்கு பகுதி இது தவிர வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளிப்புற பகுதியிலும் 16 வகையான தவறான அமைப்புகள் இருக்கின்றன.