குறி சொல்லுபவரின் வீட்டு அமைப்பும் வாஸ்துவும்

குறி சொல்லுபவரின் வீட்டு அமைப்பும் – வாஸ்துவும்

மனிதர்களாகிய நாம் நம்முடைய எதிர்காலத்தை தெரிந்துக்கொள்ள பல வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றோம். அதில் சில பேர் "குறி" சொல்லும் இடத்திற்கு சென்று தங்களுடைய எதிர்காலத்தை தெரிந்து வைத்து கொள்கின்றனர். இன்று "குறி" சொல்லுபவர்களின் வீட்டு அமைப்புக்கும் வாஸ்துவிற்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

 

வீட்டின் அமைப்புகள்

"குறி" சொல்லுபவர்களை நேரில் சந்தித்து இந்த ஆற்றல் எப்படி உங்களுக்குள் வந்து போகிறது, இதற்கென ஏதாவது தவம் போல் ஏதாவது கற்றுக்கொண்டு வந்தீர்களா என்று கேட்டால் அதற்கு அவர்கள் கூறும் விளக்கம் என்னவென்று பார்த்தோம் எனில், 'நான் இந்த வீட்டிற்கு வந்தால் மட்டுமே எனக்கு இதுபோன்ற விஷயங்கள் என் மீது வந்து போகிறது என்றும் அல்லது நான் அப்படி ஒரு நிலைக்கு சென்று விடுகிறேன்' என்றும் பதில் அளிக்கின்றனர். சரி நண்பர்களே நான் இங்கு குறிப்பிடுவது என்னவெனில் அந்த தவறான வீடு அப்படி ஒரு எண்ணத்தை அவர்களுக்கு தூண்டுகிறது.

 

வீட்டின் வாஸ்து அமைப்புகள்

1. கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பு

2.தென் மேற்கு பூஜை அறை

3. கிழக்கு உயரம் மேற்கு சரிவு

4. வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் கட்டிடத்திற்கு மேல் உயரமான தண்ணீர் தொட்டி அமைப்புகள்

இது போல் இன்னும் குறிப்பிடும் படியான சில தவறான அமைப்பு இது போல் குறி சொல்லும் ஆற்ற அவர்களுக்கு அளித்து வருகிறது. இதுபோன்ற அமைப்புள்ள வீடுகள் கோயில்களாகவும் பயன்படுவதை நான் பார்த்துள்ளேன். அன்பு நண்பர்களே நான் குறிப்பிடுவது அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட ஆய்வு , இங்கு யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் இந்த கட்டுரையை எழுதவில்லை .

 P.M.K , 8220544911