குத்து விளக்கில் தீபம் ஏற்றும் முறைகள்
ஒரு முகம் ஏற்றுவது – மத்திம பலன்களைத் தரும்.
இரண்டு முகம் ஏற்றுவது – குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும். மூன்று முகம் ஏற்றுவது – புத்திர சுகத்தைத் தரும்.
நான்கு முகம் ஏற்றுவது – மாடு, மனை போன்ற வசதி, வாய்ப்புகளைத் தரும்
ஐந்து முகம் ஏற்றுவது – செல்வத்தைப் பெருக்கும் .
தீபத்தின் வகைகள் :
பல்வேறு வகையான தீபங்களை ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது என்பது இந்து சமயத்தினருக்கே உள்ள தனிச் சிறப்பாகும்.
பொதுவாக வீட்டில் தீபம் ஏற்ற பஞ்சலோக விளக்கு உகந்தது.
என்றாலும், மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கே சிறப்பானது .
குத்து விளக்கு என்றால் ஐந்து முகங்களைக் கொண்ட விளக்கே ஏற்றது.