குண்டு_போடும்_தெரு

#குண்டு_போடும்_தெரு

#சேலம் கோட்டை பகுதியில் திருமணிமுத்தாறின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் கி.பி.1950 வரையிலும் நேரம் அறிவிக்கும் பொருட்டு குண்டு வெடித்தல் வழக்கத்தில் இருந்துள்ளது. இப்பகுதி அந்நாளில் #குண்டுமேடு (Cannonball Mound) என்று அழைக்கப்பட்டது!

1873 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குண்டுவெடிக்கும் நேரம் மதியம் 12 மணி என்பது இரவு 8 மணியாக மாற்றப்பட்டது!

இந்த இரவுநேர சத்தம் கோட்டை வாழ் குடியிருப்பு பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுத்தியதால் 1881 ஆம் ஆண்டு இதனை இடம் மாற்றம் செய்யச்சொல்லி போராட்டம் நடத்தியுள்ளனர்!

1950-களின் இறுதியில் இவ்வழக்கம் மாற்றப்பட்டு திருமணிமுத்தாறின் கிழக்கு கரையில் அமைந்திருந்த அருணாசல ஆசாரி அவர்களின் பங்களா மீது ஒலிப்பான் (சைரன்) அமைத்தனர்!

இப்பங்களா சிதிலமடைந்த பின்பு இந்த ஒலிப்பான் போஸ் மைதானத்தின் மணிக்கூண்டிற்கு மாற்றப்பட்டது!