குடியிருப்பின் ஒரு பகுதியை வாடகைக்கு விடலாமா

வாஸ்து நிபுணர் 
P.M.கிருஷ்ண ராஜன்
 82205-44911

குடியிருப்பின் ஒரு பகுதியை வாடகைக்கு விடலாமா?

  நகர்புறங்களிலும் சரி, கிராமப்புறங்களிலும் சரி தாங்கள் குடியிருக்கும் பகுதியில், ஒரு பகுதியை கடைக்காக பிரித்து கட்டி வாடகைக்கு விட்ட இடங்களை நாம் நிறைய காணமுடிகிறது. இதுபோல் வாடகைக்கு விடலாமா? விடுவதால் நமக்கு என்ன தீமைகள் வரும் என்பதை பார்ப்போம்.

வடகிழக்கு, தென்மேற்கு பகுதியை வாடகைக்கு விடுவதால் ஏற்படும் விளைவுகள் :

  மொத்த வீட்டமைப்பின் வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கடையையோ அல்லது வீட்டையோ வாடகைக்கு விடுதல்.

1. ஆண்கள் மட்டும் பாதிக்கப்படுதல்

2. அடிக்கடி விபத்து

3. தற்கொலை எண்ணம்

4. மூத்த வாரிசு ஆண் வாரிசு என்றால் வீட்டை விட்டு வெளியேறுதல்

5. மூத்த வாரிசு பெண் என்றால் அவருடைய கணவர் வேலையில்லாமல் இருத்தல்

6. திருமணம் தள்ளிப் போகுதல்

7. கடன் சுமை

8. தொழில் நஷ்டம்

9. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை

10. இரண்டு, மூன்று திருமணங்கள்

11. வாடகைக்கு இருப்பவரே வீட்டை விலைக்கு வாங்கிக்கொள்ளுதல்

 

வீட்டின் மொத்த அமைப்பில் தென்கிழக்கையோ அல்லது வடமேற்கையோ வாடகைக்கு விடுவதால் ஏற்படும் தீமைகள் :

1. போலீஸ் கேஸ்

2. கோர்ட் கேஸ்

3. தீ விபத்து

4. பெண்கள் மட்டும் அதிக நோய்வாய்படுதல்

5. மர்மமான நோய்கள்

6. கருச்சிதைவு

7. கணவன், மனைவி பிரிந்து வாழ்தல் 

8. போதைக்கு அடிமை

9. கடன் சுமை

10. சொத்து ஏலம் போகுதல்

11. பெண் சொத்தாக மாறிவிடுதல்

12. ஆண்களுக்கு வேலையற்ற தன்மை

  இங்கு குறிப்பிட்ட அனைத்து வித பிரச்சனைகளும் ஒருவர் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடும்போது ஏற்படும் தீமைகளாகும். ஒரு சில இடங்களில் இதுபோல் வாடகைக்கு விட்டும் அந்த வீட்டில் உள்ளவர்கள் நல்ல நிலையில் இருப்பதை காணமுடியும். அப்படி உள்ள வீடுகளில் வேறு விதமான குறைகள் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இடத்திற்கு ஏற்பவும், சூழ்நிலைக்கு ஏற்பவும் கால இடைவெளி எடுத்துக்கொள்ளும்.