கிளவுட் டெக் தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுக்க இந்திய சிறு-நடுத்தர தொழில் துறைக்கு சரியான நேரம், ஏன்?

சென்னை: இந்தியாவின் வளர்ச்சிக்கான ஆன்லைன் மேடையாக ZOHO ஆப் விளங்கி வருகிறது.

இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒரு ஆன்லைன் மேடை அரசாங்கம் இந்தியாவை ஒரு டிஜிட்டல் கம்பெனியாக மாற்ற அழுத்தம் கொடுத்து வருகிறது. இப்பொழுது நீங்கள் எது வாங்கினாலும் விற்றாலும் எல்லாம் ஆன்லைன் பிஸ்னஸ் ஆகிவிட்டது. வங்கிகளும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தின் மதிப்பை உணர்ந்துள்ளன.

வாடிக்கையாளர்களும் தங்களுக்கு ப்ரண்ட்லியாக இருக்கும் தொழில் நுட்ப புரட்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படி எல்லாருக்கும் மகிழ்ச்சியூட்டும் விதத்தில் வருவது தான் இந்த க்ளவ்டு டெக்னாலஜி. இது உங்கள் வணிகத்தின் தொடக்கமாகவும் முதுகெலும்பாகவும் இருக்கக் போகிறது. இந்த க்ளவ்டு டெக்னாலஜி குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பயனை அளிக்க போகிறது.

இதன் மூலம் தொழிலில் அதிகமான பண முதலீடு போடுவது தடுக்கப்பட்டு உலகத்தரம் வாய்ந்த மென்பொருள் ஒவ்வொரு தொழிலதிபர் கையிலும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் வியாபாரம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் எந்த நேரத்திலும் நீங்கள் பாதுகாக்க முடியும்.

முந்தைய கம்ப்யூட்டர் உலகில் க்ளவ்டு சாஃப்ட்வேர் என்பது ஒரு சேமித்து வைக்கும் இடமாகவே இருந்தது. இந்த தரவு மையங்களை மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது சிறிய மற்றும் நடுத்தர தொழில் புரிபவர்கள் கூட இந்த க்ளவ்டு டெக்னாலஜி மூலம் உங்கள் தரவுகளை ஆன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். தற்போது வணிகங்கள் பரந்து விரிந்து வருகிறது. இதனால் அவர்களின் வரவு செலவுகள், விற்பனை சரிவு போன்ற தகவல்களை பராமரிக்க வேண்டியதும் அவசியமாகிறது. எனவே அவர்களுக்கு இந்த க்ளவ்டு திட்டமுறை ஒரு ப்ரண்ட்லியான டெக்னாலஜி ஆக இருக்கும். இது 1000 க்கு மேற்பட்ட கம்பெனிகளின் வெற்றிக்கு அடித்தளமாக அழைத்துச் செல்கிறது. ZOHO என்ற சக்தி வாய்ந்த நிறுவனம் உங்களுக்காக இந்த டெக்னாலஜி சாஃப்ட்வேரை வழங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் பயன் பெற முடியும். நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ZOHO உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது. இது ஒரு வணிக ரீதியான பயன்பாட்டு தொகுப்பாகும்.

நமது இந்திய நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலை நம்மை மொபைல் தரவு நிலைக்கு இட்டுச் செல்கிறது. கடந்த 2016-2017 ஆம் ஆண்டுக்குள் ஐந்து மடங்கு ஆன்லைனில் டேட்டாக்களை சேமிப்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம் கையில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்ட்ராய்டு மொபைல்களும், புதிய புதிய டேட்டா சேமிப்பு திட்டங்களும் தான். இந்த டெக்னாலஜி அப்படியே நின்று விடாமல் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப வளர்ந்து கொண்ட வருகிறது என்பது தான் உண்மை.

இப்பொழுது வணிக ரீதியாக தொழில் புரிய ஆன்லைன் ஒரு திறந்த மார்க்கெட் ஆக செயல்படுகிறது. தற்போது இந்தியாவில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் கூட பெரிய கனவு காண முயலுகின்றனர். இப்பொழுது உலகளவில் வளர்ந்து வரும் பெரிய டிஜிட்டல் வர்த்தக சந்தையாக இந்தியா முன்னேறி வருகிறது. வெளி முதலீடும், பணமில்லாமல் அன்றாட முதலீடு செய்யும் கம்பெனிகளும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. எனவே அடுத்ததாக இதற்கெல்லாம் க்ளவ்டு டெக்னாலஜி தான் ஒரு முன்னேற்ற பாதையாக வழி நடத்த போகிறது.

இந்தியாவில் இருப்பவர்கள் தான் அதிகமான டேட்டா வளர்ச்சியை பயன்படுத்தி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரப் போகிறீர்கள் இந்த டேட்டா தொழில் நுட்பம் கிட்டத்தட்ட ஐரோப்பாவில் உள்ள GPDR மாதிரி எதிர்காலத்தில் செயல்படப் போகிறது. கண்டிப்பாக இது இந்திய மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் அதே நேரத்தில் அவர்களின் வரவேற்பையும் பெறும் என்பதில் ஐயமில்லை. எனவே இதுவே சரியான தருணம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் க்ளவ்டு தொழில் நுட்பத்தை ஆரம்பித்து வெற்றி காண.

இந்தியாவில் மட்டும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுமார் 5 கோடிக்கு மேல் இருக்கும். இதில் பணிபுரியும் மக்கள் மட்டும் 10 கோடி இருக்கும். அப்படியானால் இது நாட்டின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்காகும். எனவே இந்த நிறுவனங்கள் இந்த அட்டகாசமான க்ளவ்டு முறையை ஏற்படுத்த இதுவே சரியான தருணம். இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும். நிறைய பேர்கள் இந்த க்ளவ்டு முறைக்கு செல்வதால் அதற்கான சாஃப்ட்வேர் விலையும் குறைகிறது. இதனால் மக்கள் ஆன்லைன் வணிகத்தை நோக்கி நகர்கின்றனர். எனவே இனி ஒரு தொழிலை ஆன்லைனில் நடத்த எந்த கஷ்டமும் இருக்காது. இந்த க்ளவ்டு முறை இந்தியாவிற்கு ஒன்னும் புதியது அல்ல. அதன் வளர்ச்சியை இன்னும் பலமடங்கு கொண்டு செல்ல ஒரு உந்துதல் தேவைப்படுகிறது. எனவே சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கூட்டாக அமைந்து இது குறித்து ஒரு முடிவெடுக்க வேண்டும். க்ளவ்டு நோக்கி உங்கள் தொழில் முறையை நகர்த்த வேண்டும். இந்த க்ளவ்டு உங்கள் தொழில் முறையை மாற்றுவதோடு, செயல்முறைகளை எளிதாக்கவும், வேலைகளையும், மேற்பார்வை பார்ப்பதையும் குறைக்கிறது.

ZOHO என்பது ஒட்டுமொத்த வணிகத்தையும் இயக்கும் திறன் கொண்ட ஒரே ஆன்லைன் மேடை. இந்த ஆப் பயன்பாடு விற்பனை, மார்க்கெட்டிங், பின்புல அலுவலக செயல்பாடுகளுக்கு, உற்பத்தி திறன், ஒத்துழைப்பு கருவியாக ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பயன்பாடாகும். ZOHO உலகளவில் மிக உயர்ந்த மென்பொருள் நிறுவனம் ஆகும். கிட்டத்தட்ட உலகளவில் 35 மில்லியன் மக்களும், நூறாயிரக் கணக்கான கம்பெனிகளும் தங்கள் வர்த்தகத்தை இயக்க ஒவ்வொரு நாளும் ஷோகோவை நம்பியுள்ளனர்.