கிருத்திகை நட்சத்திர குணாதிசியங்கள் !!
நட்சத்திரத்தின் இராசி : மேஷம், ரிஷபம்.
நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்.
நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கான இராசி அதிபதி : செவ்வாய்.
நட்சத்திரத்தின் இரண்டு முதல் நான்கு பாதத்திற்கான இராசி அதிபதி : சுக்கிரன்.
பொதுவான குணங்கள் :
- நேர்மையுடைவர்கள்.
- தெய்வபக்தி கொண்டவர்கள்.
- ரொம்ப சுத்தமாக திகழக்கூடியவர்கள்.
- சாமர்த்தியசாலியாக திகழக்கூடியவர்.
- விருந்தோம்பல் பண்பு இவர்களிடம் இருக்கும்.
- தர்ம சிந்தனையும், இரக்க குணமும் கொண்டவர்கள்.
- அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் இருக்கக் கூடியவர்கள்.
- கொஞ்சம் முன் கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள்.
கிருத்திகை முதல் பாதம் :
இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும்
கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- பூமி, வீடு மற்றும் கால்நடை போன்ற செல்வத்தை உடையவர்கள்.
- நல்ல ஞானம் உள்ளவர்கள்.
- திறமைகளுடன் இருப்பார்கள்.
- எதிரிகளை தந்திரத்தால் வெற்றி கொள்ளக் கூடியவர்கள்.
- உடல் பலவீனம் உடையவர்கள்.
- புகழை விரும்புபவர்கள்.
கிருத்திகை இரண்டாம் பாதம் :
இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- அதிக பாசத்துடன் இருப்பார்கள்.
- போராட்ட குணம் உடையவர்கள்.
- வீரம் மிக்கவர்கள், தற்பெருமை கொள்பவர்கள்.
- கலைகளை பயிலுபவர்கள்.
- சோம்பேறித்தனமும், மந்தத்தன்மையும் உடையவர்கள்.
கிருத்திகை மூன்றாம் பாதம் :
இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நல்ல உழைப்பாளியாகவும்.
- கல்வியில் அதிக பற்றுதல் இருக்காது.
- கயவர்களின் சகவாசம் உடையவர்கள்.
- விடாமுயற்சி, கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பு போன்றவை இருக்கும்.
கிருத்திகை நான்காம் பாதம் :
இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.
- மன உறுதி கொண்டவராகவும் இருப்பார்கள்.
- நீதி நேர்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.
- பெண் போகத்தில் விருப்பம் உடையவர்.
- ஆடம்பர வாழ்க்கை வேண்டும் என்ற ஆசை உடையவராகவும் இருப்பார்கள்.