கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்க தலங்கள்
திருவண்ணாமலையை காக்கும் எட்டு திசை காவல் தெய்வங்களாக கிரிவலப்பதையில் உள்ள “அஷ்டலிங்கங்களை” பௌர்ணமி அன்று வழிப்பட்டால் சகல பிரச்சனைகளும் விலகும் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை.
இந்திரலிங்கம் :
கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். கிழக்கு திசையில் அமைந்துள்ளது இந்த திருக்கோயில். நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இந்த லிங்கத்தை வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும், பெருத்த செல்வமும் கிடைக்கும்.
அக்னிலிங்கம் :
இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இது கிரிவலம் செல்லும் வழியில் இடதுபுறத்தில் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
யமலிங்கம் :
மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கத்தை வேண்டுபவர்கள் பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.
நிருதிலிங்கம் :
நான்காவதாக உள்ள லிங்கம் நிருதிலிங்கம். இந்த நிருதி லிங்கத்துக்கு மிகச்சிறப்பு என்னவென்றால் இந்த லிங்கத்தின் முன் இருக்கும் நந்திக்கு அருகில் நின்று திருவண்ணாமலையை பார்த்தால், அங்கு சுயம்புவாய் காட்சி தருகிறது நந்திஇந்த லிங்கத்தை வணங்கினால் பக்தர்கள் நிம்மதியாக பிரச்சனைகளின்றி வாழலாம்.
வருணலிங்கம் :
ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருணலிங்கம். கிரிவலப்பாதையில் ராஜகோபுரத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது வருணலிங்கம்.சமூகத்தில் முன்னேற்றமடையவும், கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
வாயுலிங்கம் :
ஆறாவதாக உள்ள லிங்கம் வாயுலிங்கம். இந்த வாயுலிங்க திருக்கோயிலை நெருங்கும் போதே நம்மை தென்றல் காற்று தீண்டி செல்லும். மனதில் ஒரு பேரமைதி தவழ்வதை உணர முடியும்.இந்த லிங்கத்தை வணங்கி வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல் மற்றும் பொதுவாக வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.
குபேரலிங்கம் :
ஏழாவது லிங்கம் குபேரலிங்கம். பொருளாதார நிலையை உயர்த்தித் தரும் லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஈசானியலிங்கம் :
கிரிவலப் பாதையின் கடைசி லிங்கம் ஈசான்ய லிங்கம் .ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். இந்த லிங்கத்தை வழிபட்டால் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு திகழ்வார்கள்.