காலியிடத்தில் மதில் மேல்கூரை அமைக்கலாமா மற்றும் அதற்குரிய பலன்கள்

காலியிடத்தில் மதில் மேல்கூரை அமைக்கலாமா ? அதற்குரிய பலன்கள்

வடக்கு :

பெண்களையும், பெண்களின் உயர்வையும், செல்வத்தையும் அழிக்கும்.

வடகிழக்கு:

வம்சம் அழியும். குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தினரின் உடல் நலம் கெடும். ஆண் குழந்தைகள் அதிகமிருக்காது. குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும்.

கிழக்கு:

ஆண்களையும், ஆண்களின் உயர்வையும், ஆண் சந்ததியையும், புகழையும், முன்னேற்றத்தையும் அழிக்கும்.

தென்கிழக்கு:

கணவன் மனைவி உறவு கெடும். தாய் மகன் உறவு மிகக் கெடும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் பறிபோகும். குழந்தைகளின் கல்வி – பாதிக்கப்படும். திருட்டு, தீ விபத்து ஆகியன ஏற்படும். தொழிலில் தடைகள் பெருகும். பொருளாதார நெருக்கடி உண்டாகும்.

தெற்கு:

பெண்களின் உடல்நலனும் உயர்வும் மகிழ்வும், புகழும், இதர நலன்களும் பெருகும்.ஆயின் மனைக்கு வெளியில் இப்பகுதியில் கிணறோ, ஆழ்துளைக் கிணறோ, நிலத்தடி நீர்த்தொட்டியோ கூடாது.

தென்மேற்கு:

முன்னேற்றமும், உயர்வும், புகழும், உடல் நலனும், செல்வமும், இதர நலன்களும் பெருகும். ஆயின் மனைக்கு வெளியில் இப்பகுதியில் கிணறோ, ஆழ்துளைக் கிணறோ நிலத்தடி நீர்த்தொட்டியோ கூடாது.

மேற்கு:

ஆண்களின் உடல் நலனும், உயர்வும், மகிழ்வும், புகழும், இதர நலன்களும் பெருகும். முன்னேற்றம் பெருகும். ஆயின் மனைக்கு வெளியே இப்பகுதியில் கிணறோ, ஆழ்துளைக் கிணறோ, நிலத்தடி நீர்த்தொட்டியோ கூடாது.

வடமேற்கு:

நன்மைகள் குறைந்து தீமைகள் பெருகும். வாழ்வு நிலையற்றதாகும். தேவையின்றிப் பகை பெருகும். நண்பரும் பகைவராவர். வழக்குகள் உண்டாகும். வறுமை ஏற்படும். பெண்களின் மகிழ்வும், சுகமும், மனை நிம்மதியும் கெடும்.

நான்கு மூலைகள் :

மிகத்தீய பலன்கள் உண்டாகும். குடும்பத்தலைவரின் நிம்மதி கெடும். குடும்பத்தலைவரைத் திடீரென்று வீட்டைவிட்டு ஓடிப்போகச் செய்யும்.