காலிஃப்ளவர் குருமா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
காலிப்ளவர் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – கால் கப்
பட்டாணி – கால் கப்
வெங்காயம் – 1 1/2 கப்
தக்காளி – 1 1/2 கப்
பூண்டு – மூன்று பல்
இஞ்சி – சிறிய துண்டு
மிளகாய் வற்றல் – ஏழு
கொத்தமல்லி – சிறிதளவு
சீரகம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்துக் கொண்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பட்டாணி, காலிப்ளவர், உருளை மூன்றையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகத்தை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் கொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுதை ஊற்றி உப்பு சேர்க்கவும்.
கெட்டியாக இருந்தால் சிறிது நீர் விட்டு கிளறவும்.
இந்த கலவை கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்தவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான எளிதில் தயாரிக்க கூடிய காலிப்ளவர் குருமா ரெடி.