காதல் வேட்கை அதிகம்
- செவ்வாய் -வேகம்,வெறித்தனம்,கோபம்,முரட்டு குணம்.
- சுக்ரன்– அழகு,காதல்,காமம்….
- சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை உள்ள ஜாதகருக்கு காதல் வேட்கை அதிகம் இருக்கும்.
- சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால்.காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.
- ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும்.
- விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதல் ஒரு வெறியாகவே இருக்கும். காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள்.
- நீச சுக்ரன் செவ்வாய் காமத்தில் கரை காண வைத்து உலகே மாயம். காயமே இது பொய்யடா. காற்றடைத்த பையடா என எண்ண வைத்து விடுவார்.
- ஆறுபதிலும் ஆசை வரும்.காரணம் செவ்வாய் + சுக்ரன் சேர்க்கை.
- சுக்ரன், செவ்வாய்,ராகு திசை நடப்பில் இருந்தால் மேற் சொன்ன பலன் உண்டு.