வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
8220544911
கல்வி நிலையங்களும் வாஸ்துவும்
கடவுள் நமக்கு கொடுத்த செல்வங்களில் முதன்மையானது கல்விச் செல்வமே அப்படிப்பட்ட கல்வியை நாம் பயிலக்கூடிய இடம் எப்படி இருக்க வேண்டும். கல்வி நிலையங்களுக்கும் வாஸ்துவுக்கும் சம்பந்தம் உண்டா என்பதை பற்றி அறிவோம்.
கல்வி நிலையங்களுக்கும், வாஸ்துவுக்கும் சம்பந்தம் உண்டு. அந்த வகையில் எந்த மாதிரியான கல்வி நிலையங்களானாலும் கட்டிடம் சதுரம், செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த வகையில் பள்ளி (School), கல்லூரி (College), பல்கலைகழகங்கள் (University) வரை எதுவானாலும் கட்டிட அமைப்பு என்பது சதுரம், செவ்வகம் மட்டுமே.
ஒரு சில கல்வி நிலையங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கும், ஒரு சில கல்வி நிலையங்கள் தோல்வியில் முடிவதற்கும்,வஸ்துவிற்கும் சம்பந்தம் உண்டு. கல்வி நிலையங்களை பொறுத்தவரை பொதுவாக சரியானவற்றையும், தவரானவற்றையும் சுட்டிக் காட்ட இயலாது. காரணம் இடத்திற்கேற்பவும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் வாஸ்து சாஸ்த்திரம் மாறுபடும்.
வாஸ்துபடி திசை
பயிற்சி மையம் (Tuition Center, Coaching Center),பயிற்சி கல்லூரி (Tutorial College), இது போல இன்னும் பல சிறு சிறு கல்வி நிலையங்கள் உண்டு இவைகளுக்கு வாஸ்து என்பது வேலை செய்யும். இது போல சிறு சிறு நிறுவனங்கள் அனைத்தும் வடக்கு திசையை பார்த்தாற்போல் இருப்பது மிக மிக சிறப்பை தரும்.
குழந்தைகள் படிக்கும் திசை
படிக்கும் குழந்தைகள் எப்பொழுதும் வடக்கு, கிழக்கு திசையை பார்த்தார் போல் அமர்ந்து படித்தால் படிப்பு நன்றாக வரும். படிக்கும் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க மஞ்சள் நிற காகிதத்தில் சிவப்பு நிற பேனாவால் எழுதி பழகும்போது ஞாபகம் அதிகரிக்கும்.