கலப்புத் திருமணத்திற்கு, வாஸ்து ஒரு காரணமா

கலப்புத் திருமணத்திற்கு, வாஸ்து ஒரு காரணமா?

 

வாழ்க்கைத்துணை

 

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று கூறினார்கள் நம் முன்னோர்கள். அந்த முறையில் ஒருவரின் வாழ்வில் தனது விருப்பத்திற்கும், எண்ணத்திற்கேற்றபடியான மனைவி அமைந்து விட்டாலே, அவர் பாக்கியசாலி, அதேபோல் அந்த பெண்ணுக்கு தன்னைப் புரிந்து கொண்ட கணவன் அமைந்து விட்டால், அவளும் மிகவும் பாக்கியசாலி தான்.

 

காதல் முதல் கல்யாணம் வரை

 

அறிவியல் முன்னேற்றத்திலும், நாகரீக முன்னேற்றத்திலும் நாம் இருக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவில் வேலைக்குச் செல்கிறோம். அந்த வேலைக்குச் செல்லும் இடத்தில் நமக்கு பிடித்த அல்லது நம்மைப் பிடித்தவர்கள் நம்மிடம் பழகும் போது, ஒருவித இனம் புரியாத மகிழ்ச்சி மனதில் ஏற்படும். அந்த மகிழ்வான மனநிலை காலப்போக்கில் திருமணம் வரை கூட சென்று விடுகிறது. நம்மிடம் அன்பாகப் பழகக்கூடியவர்கள் இந்த மதம், இந்த ஜாதி என்ற பாகுபாடு அங்கு கிடையாது. அதை அவர்கள் பொருட்படுத்துவதும் இல்லை, இன்னும் தெளிவாகக் கூறினால் அதைப் பற்றிய கவலையே அவர்களுக்கு இல்லை.

 

எண்ணங்களும், திசைகளும்

 

என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்த வீட்டில் சிலபல தவறான அமைப்புகள் உள்ள வீட்டில் வசிப்பவரின் எண்ணங்களே அவர்களை அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது. அந்தத் தவறுகளுக்கான காரணம் வீட்டின் அமைப்பு , தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் உள்ள ஒரு சில தவறுகளே ஆகும். அதாவது தென்மேற்கு மூலையில் பூஜையறை , கழிவறை, சமையலறை போன்றவை தென்மேற்குப் பகுதிகளில் இருக்கக் கூடாது. வடக்கு தெருக்குத்து, கிணறு, சம்ப், வாசல் ஆகியவை வடமேற்குப் பகுதிகளில் இருக்கக் கூடாது. அந்தத் தவறுகளை சரி செய்வதன் மூலம் அவர்களின் எண்ணத்தையும் மாற்ற முடியும், நல்வாழ்க்கை வாழவும் வழி வகுத்துக் கொள்ள முடியும்.

P.M.K, 82205-44911