கருவூரில் 100 ஆயிரம் கோடி நமசிவாய மந்திரம் சொல்லுதல் நிகழ்ச்சி

கருவூரில் 100 ஆயிரம் கோடி நமசிவாய மந்திரம் சொல்லுதல் நிகழ்ச்சி

வருகின்ற சூன் 1 ம் தேதி முதல்  10ம் தேதி வரை 400 பேர் சிவாச்சாரியார்கள், 1000 பேர் அடியார்கள், பக்தர்கள் , பொதுமக்கள் பல்வேறு அமைப்புகள் சார்ந்த 2600 பேர் என குறைந்தது 4000 பேர் ஆலயத்திற்கு உள் அமர்ந்து காலை முதல் மாலை வரை இடைவிடாது (உணவு , தேநீர் நேரம் தவிர்த்து ஓம் நமச்சிவாய மந்திரம் உச்சரிக்க வேண்டும்.

இருமுறை பிரசன்னம் பார்த்ததில் இதை முடித்துத் தான் திருக்குட நன்நீராட்டு என்னும் கும்பாபிஷேகம் பணி திருப்பணி தொடர வேண்டும் என உள்ளதால்

இதுவரை எந்தச் சிவாலயத்திலும் நடைபெற்றதாக தெரியவில்லை, எனினும் இது ஒரு கின்னஸ் பதிவாக 100 ஆயிரம் கோடி சத கோடி நமசிவாய மந்திரம் சொல்லும் நிகழ்வில் ஒவ்வொரு அமைப்பினரும், குடும்பத்தவரும் கலந்து கொள்ள ஆலய நிர்வாகத்தில் உங்கள் அமைப்பிலிருந்து எத்தனை பேர் கலந்து கொள்கிறீர்கள் என்பதை தெரிவித்து பங்கேற்று விரைவில் இறைச்சாந்திப் பெருவிழாவாம் மங்கல நீராட்டு எனும் கும்பாபிஷேகம் நடைபெற துணை நிற்க வேண்டுகிறோம்.