வாஸ்து நிபுணர்
P.M.கிருஷ்ண ராஜன்
82205-44911
கடன் ஏற்பட வாஸ்து ஒரு காரணமா?
நம்முடைய வாழ்வில் மிக முக்கிய பங்கினை வகிப்பது பணம், பணம் தான் பிரதானம், பணம் ஒன்று இல்லாத வாழ்வை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. பணம் என்கின்ற ஒன்று உங்களிடம் இருந்தால் இந்த உலகமே உங்கள் பின்னால் இருப்பது போல் தோன்றும். அதே பணம் உங்களிடம் இல்லாமல் இருந்தால் நாம் ஏதோ வேறு கிரகத்தில் இருப்பது போன்ற தோற்றம் நமக்கு ஏற்பட்டு விடும்.
“கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்”
இங்கு பணம் இல்லாமல் கடனும் வாழும் மனிதனின் மன நிலையைத்
ஒரு புலவர் அரசனின் மன நிலையே கலங்கும் அளவிற்கு கடன் பட்டவன் மனநிலை இருக்கும் என்கிறார். அவ்வளவு பலம் வாய்ந்தது பணம்.
ஒரு சில நேரங்களில் எனக்கு ஒன்று தோன்றுவது உண்டு ,அது என்னவென்றால் மனிதன் என்கிற இயந்திரம் பணத்தை சம்பாதிக்க மட்டுமே பிறப்பது போல் தோன்றும். நம்முடைய மனிதர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது?
தொழிலை தீர்மானிக்கும் வீடு
சரி நண்பர்களே, நாம் வசிக்கக்கூடிய வீடே நம்முடைய தொழிலை தீர்மானிக்கிறது. எனவே அதே வீடு தான் நம்முடைய வருமானத்தையும் தீர்மானிக்கிறது. எனவே அதே வீடு தான் கடனையும் உருவாக்குகிறது. அந்த வகையில் நாம் வசிக்கும் வீட்டின் தென்மேற்கு பகுதி மற்றும் வடப்பகுதி மற்றும் வடமேற்கு பகுதிகள் மட்டுமே பணத்தையும் கடனையும் உருவாக்க வல்லமை கொண்டவர்கள். இந்த மூன்று பகுதிகளை சரியாக வைத்துக் கொண்டால் கடன் சுமை இல்லாமல் வாழ முடியும் .
எனவே அன்பு நண்பர்களே மாற்றம் மட்டும் மாறாது மற்றவைகள் மாறக்கூடியது, நீங்கள் வசிக்கும் வீட்டை சரி செய்தால் 100% அல்லது 200% சதவீத கடனுக்கான தீர்வு கிடைக்கும். நீங்கள் மாற தயாரானால் இந்த பிரபஞ்சமே மாற காத்துக் கொண்டிருக்கிறது.
மாற்றம் தான் முன்னேற்றம்
தவறான அமைப்புகள்:
1. வடகிழக்கு மூடிய அமைப்புகள் படி, குளியலறை (பாத்ரூம்), சமையலறை, பூஜையறை , தண்ணீர் தொட்டி தரைக்கு மேல், பிரமீடு போன்ற போர்டிகோ அமைப்பு.
2. தென்மேற்கில் மாஸ்டர் பெட்ரூமை தவிர மற்ற அமைப்புகள்
3. வடமேற்கு பள்ளம் போன்ற அமைப்புகள். 1. கிணறு, 2. ஆழ்துளைக் கிணறு (போர்) 3. தண்ணீர்த் தொட்டி,
4. உள் மூலை படி அமைப்பு ,
5. உயரமான மேற்கூரை (high ceiling), தாழ்வான மேற்கூரை (low ceiling), போன்ற அமைப்புகள் கடனுக்கா வாய்ப்புண்டு