1. ஒரு website நாமக்கு வேணும்னா முதல்ல domain name and hosting பத்தி தெரியணும்.
Domain name :
நமக்கு பிடிச்ச மாதிரியான பெயரை தேர்தெடுக்க வேண்டும். உதாரணத்துக்கு www.tamizhan.net
இதுல www.tamizhan.net ன்னு வர்றது தான் domain name. இது 69 ரூபாய்ல இருந்து 5 கோடி ரூபாய் வரைக்கும் இருக்கும். நமக்கு பிடிச்ச பெயரை ஏதாவது hosting website ல தேடி பார்க்க வேண்டும்.
அதுபோலவே extension (com, .in, .net, etc.,) போன்றவைகளில் இருந்து நமக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். சாதாரணமாக எல்லா hosting கம்பெனிகளும் முதல் முறை கவர்ச்சிகரமான விலையை காட்டி உங்களை அவர்களது customer ஆக மாற்ற முயலுவர். முதல் ஆண்டு நமக்கு எவ்வளவு குறைத்து கொடுத்தாலும் அதன் பிறகு வரும் ஆண்டுகளில் இருமடங்கு, மூன்று மடங்கு விலையில் விற்பனை செய்வர். (உதாரணமாக .com 99 ரூபாய்க்கு தரும் bigrock நிறுவனம். .com யின் விலை 569 முதல் 650 வரை இருக்கும். இரண்டாம் ஆண்டு முதல் இதன் விலை 800 ஆக உங்களிடம் இருந்து பெறுவார்.)
அடுத்ததாக Hosting
Domain hosting:
Hosting என்பது நம்முடைய website க்கு தேவையான கோப்புகளை சேகரிக்கும் இடம். நமது தேவைக்கு தகுந்தாற்போல் நாம் வாங்கிக்கொள்ளலாம். சாதாரணமாக ஒரு சிறிய கடையோ அல்லது தொழில் தொடங்குபவர்களுக்கு 500MB space இருந்தால் போதுமானது. ஆன்லைனில் விற்பனை செய்பவர்கள் 2 முதல் 5GB வரை தேவை படலாம்.
Hosting தேர்ந்தெடுக்கும் பொது Bandwidth பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். இது எத்தனை முறை நமது வெப்சைட் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும். 100 பேர் பார்க்கும் போது உங்கள் வெப்சைட் 500kb டவுன்லோட் ஆகிறது என்றால் 100 * 500kb = 50000kb அல்லது 50MB ஆக இருக்கும். அதனால் bandwidth எப்பொழுதும் அதிகமாக இருக்க வேண்டும்.(பள்ளி, கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாகும் பொது சில வெப்சைட்கள் கீழே உள்ளது போல down ஆகி விடும்.)