ஒரு வீட்டின் கிழக்குப் பகுதி வாஸ்து படி எவ்வாறு இருக்க வேண்டும்

                                 ஒரு வீட்டின் கிழக்குப் பகுதி வாஸ்து படி எவ்வாறு இருக்க வேண்டும்?

 

கட்டிடங்கள் எப்பொழுதுமே சதுரம் சதுரமாக மட்டுமே இருக்க வேண்டும். இதில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் நிறைய இடைவெளி விட்டு அமைக்க வேண்டும்.

கிழக்குப் பகுதியில் இடைவெளி குறையும் பட்சத்தில் நோய்கள் அதிகரிக்கும்.

வடக்கு பகுதியில் இடைவெளி குறையும் பட்சத்தில் பணவரவு தட்டுப்பாடு ஏற்பட்டு கடன் சுமை அதிகரிக்கும். அது மட்டுமின்றி வறுமையும் அதிகரிக்கும்.

 

இன்றைக்கு நகர்ப்புறங்களில் கிழக்கு வடக்கு பகுதியில் இடம் விட்டு வீடு கட்டக்கூடிய சூழ்நிலை தற்சமயம் மிக மிக குறைவாகவே உள்ளது, தங்களிடம் உள்ள அந்த குறைந்த அளவில் கிழக்கு பக்கம் முடிந்த அளவிற்கு 5 அடி 6 அடி இடைவெளி விட்டு வீடு கட்டினால் மட்டும் அந்த வீட்டிற்கு வாஸ்து பலன் பொருந்தும்.

 

அதேபோல் வடக்கு பகுதியிலும் 5 அல்லது 6 அடி இடைவெளியில் விட்டு வீடு கட்டினால் மட்டுமே வாஸ்து பலன் பொருந்தும். ஆனால் இன்றைக்கு நகர்ப்புறங்களில் ஒரு அடி இரண்டு அடி இதுபோல இடைவெளி விட்டு வீடு கட்டுகிறார்கள். அதனால் வாஸ்து பலன் குறைந்து அவர்கள் சிரமமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள், இதுபோன்ற இடங்களில் பக்கத்து வீட்டு அமைப்பில் உயரமான கட்டிடங்கள் வரும்போதும், பக்கத்து வீட்டு அமைப்பில் கழிவறை, கிணறு  காரணங்களுக்காக ஏற்படுத்தும் கட்டிடங்களை உயர்த்தும் போதும் நமக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் வரக்கூடும்.

காரணம் கிழக்கு வடக்கு பகுதியில் சரியான இடைவெளி விடாதது தான்   காரணம் என்று நான் கூறுவேன்.