ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி பாதிப்புகள் யாருக்கு

ஏழரைச்சனி மற்றும் அஷ்டமச்சனி பாதிப்புகள் யாருக்கு?

 

சனியின் காரகத்துவம் என்ன?

வறுமை, துன்பம், கலகம்,கடன்,நோய், அவமரியாதை ..

சனி வேலைக்காரன்..சனி ஆட்சி, உச்சம் பெற்று சுபகிரகங்களால் பார்க்கபடாமல், பாவக்கிரகங்களால் பார்க்க பட்டு இருந்தால் மிகக்கடுமையாக  உழைத்து பிழைக்க வேண்டும்.வருமானமும் சொல்லி கொள்ளும் படியாக இருக்காது.

சனி ஒருவர் ஜாதகத்தில் வலுக்குறைவாக இருக்க வேண்டும்.

முழு பாவியான சனி ஆட்சி, உச்சம் பெற்று சுபக்கிரகம் சம்பந்தப்படாமல் பாவக்கிரகங்கள் சம்பந்தப்பட்டு பிறப்பு ஜாதகத்தில் அமையும் போது ஏழரைச்சனி ,அஷ்டம சனி மிக கடுமையான பலன்களை தரும்.

பிறப்பு ஜாதகத்தில் சனி வலிமை குறைந்திருந்தால் ஏழரைச்சனி பெருமளவு கெடுதல் புரிவதில்லை. பூர்வ புண்ணியம் வலுத்து இருப்பவர்களையும் ஏழரைச்சனி பெருமளவு பாதிப்பது இல்லை.

ஜனன ஜாதகத்தில் சனியை குரு

பார்த்திருக்க அமைந்தவர்களுக்கும் ஏழரைச்சனி பாதிப்பது இல்லை.

உபஜெய ஸ்தானமான 3, 6 ,10 ,11 ம் பாவத்தில் சனி  பிறப்பு ஜாதகத்தில் அமர்ந்திருக்கும் போதும் எதிர்ப்புகளை சமாளித்து ,தடைகளை தகர்த்தெறிந்து ,கடும் உழைப்பால் ,வியர்வை சிந்தி, தர்ம நியாயங்களுக்கு கட்டுபட்டு ,தன்னுடைய சுய முயுற்சியால் முன்னுக்கு வருவார்கள். இவர்களையும் ஏழரைச்சனி, அஷ்டம சனி பாதிப்பது இல்லை.

 

அஷ்ட வர்க்கத்தில சந்திரனுக்கு  12,   1,  2 அதிக பரல்கள் இருந்து அங்கு சனிவரும்காலம் ஏழரைச்சனி பாதிப்பை தருவதில்லை.

 

ஒரு 80 வயதான பெரியவரிடம் ஏழரைச்சனி, அஷ்டம சனி நடக்கும் போது எப்படி தப்பிப்பது என்று கேட்டபோது "சனிக்கும் செவ்வாய்க்கும் நேரடி பகை." போ ! போயி முருகப்பெருமானிடம் சரணடைந்து விடு.உன்னைய சனிபகவானால் ஒன்றும் செய்ய முடியாது போ! என்றார்.

சனி பிறப்பு ஜாதகத்தில் 1,5,9 போன்ற திரிகோணங்களில் அமையும் போது ஊழ்வினை குற்றங்களால் ,பிதுர் வகை சாபங்களால்,பூர்வ ஜென்ம பாவங்களால் ஏழரைச்சனி, அஷ்டம சனி காலங்களில் அதிகமான துன்பங்களை அடைவார்கள்.பூர்வீக சொத்துக்கள் இழப்பு, பூர்வீகத்தை விட்டு வெளியேறி பிழைக்க வேண்டி வரும்.

ராசிக்கு பன்னிரண்டில் ,ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் போது புத்தியை மழுங்கடித்து, யோசிக்க விடாமல் செய்து தவறு செய்து விடுவார்கள்.

நல்ல திசாபுக்திகள் நடக்கும் போது ஏழரைச்சனியில் வீடு கட்டுவது,தோட்டம் வாங்குவது, திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு கடன் வாங்க வைப்பார்.

பொதுவாக ஏழரைச்சனி, அஸ்டமச்சனி காலங்களில் துன்பங்களை தந்து, நல்லவர் யார்? கெட்டவன் யார்  என உணரவைத்து, நல்ல புக்தி தெளிவையும், ஞானத்தையும்,வாழ்க்கையை பற்றிய சரியான புரிதல்களையும் ஏற்படுத்தி தங்கமாக ஜாதகனை ஜொலிக்க வைப்பார்.

கஷ்டம்னா என்னன்னே தெரியாத ஒருத்தன்கிட்ட ஒரு 10,00,000 (பத்து லட்சம்) ரூபாய் பணத்தை கொடுத்தா என்ன செய்வான்?

ஊதாரித்தனமாக ,ஆடம்பரமாக, வெட்டித்தனமாக ,பணத்தோட அருமை தெரியாம,தாராள மனசாக  பணத்தை தண்ணீராக செலவு செய்து கொடை வள்ளல் என பெயரெடுப்பர்.

அதுவே ஏழரைச்சனி, அஷ்டம சனிக்கு பிறகு புத்திசாலித்தனமாக

சிக்கனமாக, யாரையும் நம்பாமல் பட்டை தீட்டிய வைரமாக ஜொலித்து

பத்து இலட்சத்தை 1000 இலட்சங்களாக மாற்றி காட்டுவார்கள்

 

சனி மஹாதிசை, ராகு மஹாதிசை, சூரிய, சந்திரர்கள் தசை  போன்ற தசைகளில் கடுமையான பலன்கள் இருக்கும்.

ஏழரைச்சனி, அஷ்டம சனி பேராசையை தரும். அதற்கு இடம் தராமல் புதியதாக பெரிய மூலதனம் போட்டு தொழில் செய்யாமல் இருப்பதையே கையில் இருந்து போகாமல் இருக்க வழிதேடிக்கொள்ளுங்கள்…