தமிழ்நாடில் தற்போது அதிக லாபம் தரும் தொழில் என்றால் அது ஏற்றுமதி இறக்குமதி பற்றி வகுப்பு எடுப்பது தான்.
ஆம் ஏற்றுமதி இறக்குமதி வகுப்பு நடத்துகிறோம் என்ற பெயரில் பணத்தை பிடுங்கும் கும்பல் தற்போது அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அவர்கள் வகுப்புக்கு வருபவர்களிடம் ஒரு நாளுக்கு 1000 முதல் 5000 வரை வசூழிக்கின்றனர்.
ஏற்றுமதி வகுப்பிற்கு சென்ற பல பேர் தற்போது என்ன செய்கிறார்கள்?
100-ல் 95% பேர் IE code – யை எடுத்து விட்டு ஏற்றுமதி செய்யலாம் என்ற கனவில் order-க்காக காத்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்றுமதி இறக்குமதி வகுப்பிற்கு சென்ற பலரால் ஏன் இன்னும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை?
அந்த வகுப்புகளில் IE CODE – யை எடுத்து விட்டால் எவரும் ஏற்றுமதி செய்யலாம் என்ற தவறான கருத்துகளை கூறுகின்றனர்.
அதனால் அந்த வகுப்புகளில் அதிகமாக IE CODE – யை எப்படி எடுப்பது என்பதை மட்டும்தான் கூறுகிறார்கள்.
அவர்கள் எந்த பொருளை தேர்ந்தெடுப்பது எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது பணப்பட்டுவாடா எப்படி செய்வது போன்ற முக்கிய தகவல்களை
அதிகமாக தருவது இல்லை.
குறை குடம் கூத்தாடும் என்பது போல் ஏற்றுமதி இறக்குமதி வகுப்புக்கு சென்றவர்களின் பல பேரின் நிலமை இன்று கேள்விக்குறியாக
உள்ளது.
நான் எல்லா ஏற்றுமதி வகுப்புகளையும் குறை சொல்லவில்லை. சிலர் சிறப்பாக வகுப்பு எடுத்து சிறந்த ஏற்றுமதியாளர்களை உருவாக்குகின்றனர்.
ஏற்றுமதி வகுப்புக்கு சென்றவர்கள் தற்போது என்ன செய்ய வேண்டும்?
* அவர்கள் முதலில் ஏற்றுமதி செய்வதர்கான ஒரு பொருளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* அந்த பொருளின் தரம்.
* அந்த பொருளின் எடை.
* அதை எப்படி Packing செய்வது.
* அந்த பொருளின் தற்போது உள்ள சந்தை நிலவரம்.
* அந்த பொருளிட்கான அடக்க விலை மற்றும் FOB விலை.
*அந்த பொருளிட்கான தேவை அதிகம் உள்ள நாடு.
* அந்த பொருளிட்கான இந்திய அரச வழங்கும் ஊக்கத் தொகை மற்றும் வரிச்சலுகை.
* அந்த பொருள் எந்த EXPORT PROMOTION COUNCIL (EPC)-ன் கீழ் உள்ளது.
* அந்த பொருளுக்கு ஏதேனும் தடை உள்ளதா.
* அந்த பொருளிட்கான HS CODE என்ன.
* வங்கியில் எப்படி உதவி பெறுவது.
* எந்த முறையில் இறக்குமதியாளரிடம் பணத்தை பெறுவது. அதற்கான Document-களை தயார் செய்வது எப்படி?
இது போன்ற தகவளை ஏற்றுமதியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
நமது இந்திய அரசு வரும் காலங்களில் MAKE IN INDIA திட்டதின் மூலம் ஏற்றுமதிக்கு அதிக சலுகைகளை தரலாம் என நம்பலாம்.