எளிமையான கடலைப்பருப்பு பணியாரம் செய்வது எப்படி?

கடலைப்பருப்பு பணியாரம்

எளிமையான கடலைப்பருப்பு பணியாரம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

அதிகம் புளிப்பில்லாத மாவு – ஒரு கப்

கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி

வெங்காயம் – 1

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலையை வதக்கி இறக்கவும். அதில் சிறிது உப்பு சேர்த்து, மாவில் ஊற வைத்த கடலை பருப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு சரிபார்த்து கலக்கி கொள்ளவும்.

பணியார சட்டியை அடுப்பில் வைத்து மாவை ஒரு டம்ளரில் ஊற்றி, சட்டியில் எண்ணெய் விட்டு டம்ளரில் இருக்கும் மாவை பணயாரங்களாக குழியில் முக்கால் குழி வரை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மூடி வேக விடவும். பாதி வெந்ததும் திருப்பி போட்டு சிறிது சிவக்க வேக விட்டு எடுக்கவும்.

கடலைப்பருப்பு பணியாரம் தயார். கார சட்னியுடன் பரிமாறலாம்.